Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

தேசப்பற்றாளர் என்ற ஆடை அவிழ்கிறது! நான் ஏதாவது கூறினால் சிக்கலாகுமா! வீரவன்ச

T

The Leader Desk

ஜனவரி 7, 2022 • 2:59 PM

தேசப்பற்றாளர் என்ற ஆடை அவிழ்கிறது! நான் ஏதாவது கூறினால் சிக்கலாகுமா! வீரவன்ச

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சுசில் பிரேமஜயந்தவின் வாயை அடைத்த பின்னர், அவர்கள் இந்த நிலமைக்கு சென்றுள்லதாகவும் அவர் குறிப்பிட்டார்.
  • நாட்டில் இனவாதம், தேசப்பற்று பற்றிப் பேசிய வீரவன்ச போன்றவர்கள் அமைச்சுப் பதவி பறிபோய் விடும் என்ற அச்சத்தில் நாய்குட்டி போல் மாறியுள்ளனர்.
  • திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை 50 வருடங் களுக்கு இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கும் தீர்மானத்துடன் அமைச்சர் உதய கம்மன்பிலவின் தேசப்பற்றாளர் என்ற ஆடை அவிழ்ந்து போயுள்ளதாகவும் அவர் கூறினார்.
எழுத்து அளவு:

சுசில் பிரேமஜயந்தவின் வாயை அடைத்த பின்னர், அவர்கள் இந்த நிலமைக்கு சென்றுள்லதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

விமல் வீரவன்ச போன்றவர்கள், அரசாங்கத்தின் அனுமதியுடனேயே பேசுகின்றனர். அண்மையில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் காதருகே சென்று நான் ஏதாவது கூறினால் சிக்கலாகுமா என்று வீரவன்ச கேட்டதைப் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் சிங்கம் போல் இருந்த விமல் வீரவன்ச போன்றவர்கள் நாய் குட்டிகள் போல் மாறியுள்ளனர். நாட்டில் இனவாதம், தேசப்பற்று பற்றிப் பேசிய வீரவன்ச போன்றவர்கள் அமைச்சுப் பதவி பறிபோய் விடும் என்ற அச்சத்தில் நாய்குட்டி போல் மாறியுள்ளனர்.

அரசாங்கத்தின் கொள்கை, மோசடிகளைக் கூற முடியாது இவர்கள் தவிக்கும் போது அருவருப்பாக உள்ளது. அத்துடன் நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக் கூட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப் போவதில்லை என உதய கம்மன்பில கூறினார்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை 50 வருடங் களுக்கு இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கும் தீர்மானத்துடன் அமைச்சர் உதய கம்மன்பிலவின் தேசப்பற்றாளர் என்ற ஆடை அவிழ்ந்து போயுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் எது எப்படி இருந்த போதிலும் டொலருக்காக அரசாங்கம் நாட்டின் வளங்களை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் சமிந்த விஜேசிறி இதன்போது  தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...