Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

இந்தியா தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்க வேண்டும்! தர்மலிங்கம் சுரேஷ்

T

The Leader Desk

ஜனவரி 5, 2022 • 5:25 PM

இந்தியா தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்க வேண்டும்! தர்மலிங்கம் சுரேஷ்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எனவே நீங்கள் உங்களுடைய முகவர்களை பாவித்து பல கூட்டுக்களையும் பல ஒப்பந்தங்களையும் செய்து அதன் மூலம் மக்களை ஏமாற்றுகின்ற பகற்கனவை நீங்கள் உடனடியாக நிறுத்தவேண்டும்.
  • இந்த நாடு உண்மையிலே சீனாவின் கடன் எல்லைக்குள் அகப்பட்டிருக்கின்றது சீனா வடக்கு கிழக்கில் கால் ஊன்ற எத்தனிக்கின்றது.
  • எங்களுடைய மக்களின் நியாயமான போராட்டத்தை கருத்தில் கொள்ளாவிட்டால் நிச்சயமாக உங்களுடைய நாட்டிற்கு சீனா அல்ல தெற்காசியாவிலுள்ள பல நாடுகள் உங்களை குறிவைக்கும்.
எழுத்து அளவு:

மட்டக்களப்பு அரசடி பிள்ளையார் வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட காரியலயத்தில் நேற்று இடம்பெற்ற அமரர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் 22ஆவது நினைவேந்தல் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் உரையாற்றிய போது சுரேஷ் இவ்வாறு தெரிவித்தார். 

சுரேஷ் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இங்கே சீனா கால் ஊன்றி இருக்கின்றது சீனாவைத் தடுக்கும் முகமாக இந்தியா தங்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு பல கூட்டுக்களையும் பல அரசியல் தலைவர்களையும் தங்களுக்கு ஏற்ற மாதிரி பாவித்து ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நலனை பாதிக்கின்ற வகையில் அவர்கள் செயற்படுகின்றார்கள்.

எனவே நீங்கள் உங்களுடைய முகவர்களை பாவித்து பல கூட்டுக்களையும் பல ஒப்பந்தங்களையும்  செய்து அதன் மூலம் மக்களை ஏமாற்றுகின்ற பகற்கனவை நீங்கள் உடனடியாக நிறுத்தவேண்டும்.

எங்களுடைய மக்களின் நியாயமான போராட்டத்தை கருத்தில் கொள்ளாவிட்டால் நிச்சயமாக உங்களுடைய நாட்டிற்கு சீனா அல்ல தெற்காசியாவிலுள்ள பல நாடுகள் உங்களை குறிவைக்கும்.

இந்த நாடு உண்மையிலே சீனாவின் கடன் எல்லைக்குள் அகப்பட்டிருக்கின்றது சீனா வடக்கு கிழக்கில் கால் ஊன்ற எத்தனிக்கின்றது. நாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல இந்தியாவின் செல்ல பிள்ளைகளாக நாங்கள் யோசிக்கின்றோம் ஆனால் நீங்கள் அவ்வாறு இல்லை நீங்கள் எங்களை பகடைக்காயாகவும் அடிமைகளாகவும் பாவிக்க எத்தனிக்கின்றீர்கள்” எனக் கூறினார்.  

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...