Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

ஜனாதிபதி நினைத்தால் என்னையும் நீக்கலாம்! டலஸ்

T

The Leader Desk

ஜனவரி 4, 2022 • 4:52 PM

ஜனாதிபதி நினைத்தால் என்னையும் நீக்கலாம்! டலஸ்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதோடு சுசில் பிரேமஜயந்த தனது நண்பர் என்றும் அவரின் பதவி நீக்கம் தொடர்பில் நானும் கவலை அடைவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
  • அரசமைப்பின் பிரகாரம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே ஜனாதிபதி அந்த முடிவை எடுத்துள்ளார்.
  • அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
எழுத்து அளவு:

அதோடு சுசில் பிரேமஜயந்த தனது நண்பர் என்றும் அவரின் பதவி நீக்கம் தொடர்பில் நானும் கவலை அடைவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது 'அரசை விமர்சித்ததால் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளார். அரசை விமர்சிப்பதற்கு ஆளுங்கட்சியில் உள்ளவர்களுக்குத் தடையா?' என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

"நான் இந்த ஊடக சந்திப்புக்கு வரும் வழியில்தான் அது தொடர்பில் அறிந்தேன். அரசமைப்பின் பிரகாரம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே ஜனாதிபதி அந்த முடிவை எடுத்துள்ளார். இது கட்சியால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல.

சுசில் பிரேமஜயந்த எனது நண்பர். அவரின் பதவி நீக்கம் தொடர்பில் நானும் கவலை அடைகின்றேன். ஜனாதிபதி நினைத்தால் என்னையும் நீக்கலாம்.

அரசை விமர்சித்ததால்தான் அவர் நீக்கப்பட்டார் எனக் கூறப்படுவதை ஏற்கமுடியாது என தெரிவித்த அமைச்சர் டலஸ், தற்போதைய அமைச்சரவையில் சுதந்திரம் இருக்கின்றதாகவும் உதய கம்மன்பில போன்றவர்கள் நீதிமன்றத்தைக்கூட நாடியுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...