Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கம்!

T

The Leader Desk

ஜனவரி 4, 2022 • 4:50 AM

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதியின் அதிகாரத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தலைவர் ஒருவர் theleader.lk தெரிவித்தார்.
  • அரசாங்கத்திற்குள்ளேயே இருந்து அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த போன்றவர்களை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் தமக்கு இருப்பதாக நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆவேசமாக தெரிவித்திருந்தார்.
  • பொருட்களின் விலை உயர்வுக்கு வர்த்தக அமைச்சர், விவசாய அமைச்சர் மற்றும் உணவு அமைச்சர் ஆகியோரே காரணம் என தெரிவித்த திரு.பிரேமஜயந்த, விவசாய அமைச்சர் முழு தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
  • நேற்று (03) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பங்கு குறித்து ஜனாதிபதி கடும் கோபத்தில் இருப்பதாக தெரியவருகின்றது.
எழுத்து அளவு:

ஜனாதிபதியின் அதிகாரத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தலைவர் ஒருவர் theleader.lk தெரிவித்தார்.

அரசாங்கத்திற்குள்ளேயே இருந்து அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த போன்றவர்களை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் தமக்கு இருப்பதாக நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆவேசமாக தெரிவித்திருந்தார்.

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தமை தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

உணவு நெருக்கடிக்கு பொறுப்பான அமைச்சர்களும் கொள்கை வகுப்பாளர்களுமே பொறுப்பு என்றும், நாடு எதிர்நோக்கும் பாரிய நெருக்கடிகளுக்கு தீர்வுகாண வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவும், அவற்றைத் தீர்ப்பது வேறு குழுவின் கையில் இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் வலியுறுத்தினார்.

பொருட்களின் விலை உயர்வுக்கு வர்த்தக அமைச்சர், விவசாய அமைச்சர் மற்றும் உணவு அமைச்சர் ஆகியோரே காரணம் என தெரிவித்த திரு.பிரேமஜயந்த, விவசாய அமைச்சர் முழு தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கருத்துக்கள் தொடர்பில் அமைச்சர்களான பந்துல குணவர்தன மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்திருந்தனர். அப்போது அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை இலக்கு வைத்து மிகவும் பொறுமையிழந்து ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

நேற்று (03) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பங்கு குறித்து ஜனாதிபதி கடும் கோபத்தில் இருப்பதாக தெரியவருகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...