Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மகாவலி கரையை சேதப்படுத்தி ஆற்றின் திசையை மாற்ற அனுமதித்தது யார்?

T

The Leader Desk

ஜனவரி 4, 2022 • 2:09 AM

மகாவலி கரையை சேதப்படுத்தி ஆற்றின் திசையை மாற்ற அனுமதித்தது யார்?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மகாவலி ஆற்றின் சாபி நகர் பகுதியில் இயந்திரங்களைப் பயன்படுத்தி பெருமளவிலான மணல் அகழ்வுகளை மேற்கொள்ள அஹங்கம நிர்மாண நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இயற்கை கற்கை நிலையத்தின் தேசிய இணைப்பாளர் ரவீந்திர காரியவசம் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
  • /57/B இலக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட திருகோணமலைப் பகுதியில் 2021 மணல் அகழ்வு தொடர்பான அறிக்கைக்கு அமைய, ஏற்கனவே பெருமளவிலான மணல் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • ”விசல்மா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் மணல் அகழ்விற்கான அனுமதியை கோரியது.
எழுத்து அளவு:
"தேசிய சுற்றாடல் சட்டத்தை மீறி தனது நட்பு நாடுகளுக்கு மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகிறார்."

மகாவலி ஆற்றின் சாபி நகர் பகுதியில் 27 ஹெக்டேயர் நிலம் இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அகழ்விற்காக சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மகாவலி ஆற்றின் சாபி நகர் பகுதியில் இயந்திரங்களைப் பயன்படுத்தி பெருமளவிலான மணல் அகழ்வுகளை மேற்கொள்ள அஹங்கம நிர்மாண நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இயற்கை கற்கை நிலையத்தின் தேசிய இணைப்பாளர் ரவீந்திர காரியவசம் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் பாரிய அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி வழங்கினால், அது சுற்றுச்சூழல் மதிப்பீட்டை நடத்த வேண்டுமெனவும், சுற்றுச்சூழல் அமைப்பின் உணர்திறனை ஆய்வு செய்ய வேண்டுமெனவும்,  இல்லையெனில் பெரிய அளவிலான மணல் அகழ்வு அனுமதி வழங்குவது சட்டவிரோதமானது என சூழலியலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
   
முன்னதாக, பிரதேசவாசிகளால் சிறிய அளவிலான மணல் அகழ்வுக்கு அனுமதி  கோரிய சந்தர்பத்தில், கூடைகள் மூலம் மணல் அள்ளப்படுவது இயற்கைச் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் காரணம்கூறி, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அனுமதி மறுத்திருந்த விடயத்தை, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

”விசல்மா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் மணல் அகழ்விற்கான அனுமதியை கோரியது. ஆனால், அப்பகுதியின் சுற்றுச்சூழல் உணர்திறன் காரணமாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது.”

அங்கீகரிக்கப்படாத பெரிய அளவிலான இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அகழ்விற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சாபி நகர் பகுதியானது, மகாவலி ஆறின் ஊடாக இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட நீர்க்குளங்கள், மணல் படிவுகள் மற்றும் இயற்கையான சூழலியல் வலயத்தைக் கொண்ட பிரதேசம் என சுற்றாடல் ஆர்வலர் ரவீந்திர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

2021/57/B இலக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட திருகோணமலைப் பகுதியில் 2021 மணல் அகழ்வு தொடர்பான அறிக்கைக்கு அமைய, ஏற்கனவே பெருமளவிலான மணல் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆற்றங்கரை மிகவும் சேதமடைந்துள்ளதாக கூறும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம், இப்பகுதியில் உப்புத்தன்மை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. 
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...