Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத கஷ்டத்திற்கு மத்தியில் உள்ளனர்! சஜித் பிரேமதாச

T

The Leader Desk

ஜனவரி 3, 2022 • 4:40 AM

மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத கஷ்டத்திற்கு மத்தியில் உள்ளனர்! சஜித் பிரேமதாச

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பு கொலன்னாவையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின்(SJB) நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறியுள்ளார்.
  • வீடுகள் வெடிக்கும், சமையல் அறை தீப்பிடிக்கும், உயிரிழப்புகள் ஏற்படும் இந்த பாரதூரமான அனர்த்தத்தை உருவாக்கியவர்கள் துறைக்கு பொறுப்பான அமைச்சர்கள்.
  • மக்களை பாதுகாக்கவே அரசாங்கம் ஒன்று தெரிவு செய்யப்படுகிறது.
எழுத்து அளவு:

கொழும்பு கொலன்னாவையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின்(SJB) நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறியுள்ளார்.

மக்களை பாதுகாக்கவே அரசாங்கம் ஒன்று தெரிவு செய்யப்படுகிறது. மக்களின் துயரங்களை தற்போதைய அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை.

குழாய் மாறியுள்ளதால், எரிவாயு பிரச்சினையை இன்னும் சில வாரங்களுக்கு தீர்க்க முடியாது என அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

எரிவாயு சம்பந்தமான அனர்த்தம் ஏற்பட்ட நாளில் இருந்து அது பற்றிய அனைத்து தகவல்களையும் ஐக்கிய மக்கள் சக்தி நாட்டுக்கு தெரியப்படுத்தியது.

எனினும் துறைக்கு பொறுப்பான இரண்டு அமைச்சர்கள் உட்பட முழு அரசாங்கமும் அவற்றுக்கு பதிலளிக்காது தப்பியோடியது. வீடுகள் வெடிக்கும், சமையல் அறை தீப்பிடிக்கும், உயிரிழப்புகள் ஏற்படும் இந்த பாரதூரமான அனர்த்தத்தை உருவாக்கியவர்கள் துறைக்கு பொறுப்பான அமைச்சர்கள்.

இந்த இரண்டு அமைச்சர்களும் பொய்களை கூறினர். தற்போது இவர்கள் சார்பில் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் பொய்களை கூற முன்வந்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்கள் ஊடாக பிணத்தின் மீது ஆட்சிக்கு வந்த அரசாங்கம், மக்களின் பிரச்சினைகள் குறித்து உணரவில்லை.

மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத கஷ்டத்திற்கு மத்தியில் இருக்கும் நிலையில், அரசாங்கத்தினருக்கு எதிராக ஹூ சத்தமிட்டு தமது கோபத்தை காட்டி வருகின்றனர்.

அரசாங்கம் இந்த மக்களை பின் தொடர்ந்தும் சென்று குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கும் அளவுக்கு கீழ் நிலைமைக்கு சென்றுள்ளமை வெட்கத்திற்குரியது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...