Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

உணவு தட்டுப்பாட்டுக்கு கோட்டாபயதான் காரணம்! ஹர்ஷ டி சில்வா

T

The Leader Desk

ஜனவரி 2, 2022 • 2:19 PM

உணவு தட்டுப்பாட்டுக்கு கோட்டாபயதான் காரணம்! ஹர்ஷ டி சில்வா

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இவ் விடயம் குறித்து இன்று (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
  • அரிசி 1kg 160 ருபாய் , நெத்தலி 850 ரூபா , 500 விற்கு குறைந்த எந்தவொரு மரக்கறி வகைகளும் இல்லை.
  • பச்சை மிளகாய் ஒரு கிலோ 1200 ரூபா , முதல் தடவையாக ஒரு செய்தி எனக்கு கிடைக்க பெற்றது தம்புள்ளையில் பச்சை மிளகாய் மூட்டை ஒன்று களவெடுத்து செல்லப்பட்டுள்ளது.
  • மஞ்சள் விலை 4200 ரூபா, மக்களுக்கு வாழ முடியாத நிலை.
எழுத்து அளவு:

இவ் விடயம் குறித்து இன்று (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

நேற்று ஜனவரி முதலாம் திகதி எனது பகுதியில் முழு நாளும் எரிவாயு சிலிண்டர்களுக்காக வரிசைகள் காணப்பட்டது. அரிசி 1kg 160 ருபாய் , நெத்தலி 850 ரூபா , 500 விற்கு குறைந்த எந்தவொரு மரக்கறி வகைகளும் இல்லை. பச்சை மிளகாய் ஒரு கிலோ 1200 ரூபா , முதல் தடவையாக ஒரு செய்தி எனக்கு கிடைக்க பெற்றது தம்புள்ளையில் பச்சை மிளகாய் மூட்டை ஒன்று களவெடுத்து செல்லப்பட்டுள்ளது. அந்த காட்சி CCTV கமராவில் பதிவாகியுள்ளது.

மஞ்சள் விலை 4200 ரூபா, மக்களுக்கு வாழ முடியாத நிலை. இதுதான் உண்மை கதை. பாண் ஒரு இறாத்தலின் விலை என்ன! நினைத்த விலைகளுக்கு பாண் விற்பனை செய்யப்படுகின்றது. சீனி ஒரு கிலோ 150 , பருப்பு ஒரு கிலோ 300 ரூபா வரை விற்கப்படுகின்றது. செமன் டின் ஒன்றின் விலை 375, மீன் வகைகளை சாப்பிட நினைக்கவும் முடியாது அனைத்துமே 2000 இற்கு மேல். கோழி இறைச்சி 800 இற்கும் மேல், முட்டை ஒன்று 40 ரூபா, மீண்டும் அரிசி விலைகளை அதிகரிக்க தீர்மானித்து வருகின்றனர்.

இந்த 2022 ஆம் ஆண்டில் பாரிய அழிவொன்று ஏற்படப்போகிறது. விவசாய பிரச்சினைக்கு ஓமிக்ரோன், டெல்டா என்பவை காரணம் அல்ல.கொவிட் தொற்று பரவ ஆரம்பித்த காலத்தில் இருந்து அத்தியாவசிய சேவைகளாக அரிசி ஆலைகள் செயற்ப்பட்டன. விவசாயிகளும் அவர்களுடைய வேலைகளை பார்த்தார்கள்,அவர்கள் வீட்டில் இருக்கவில்லை .

ஜனாதிபதி அவர்களே, மக்கள் உண்பதற்கு வழியில்லாமல் உள்ளார்கள். ஒரு சில பகுதிகளில் மக்கள் ஒரு வேளை உணவை மாத்திரமே உட்கொள்கின்றனர். மக்களின் நிலைமையை சென்று பாருங்கள் ஜனாதிபதி அவர்களே என்று கோரிக்கை விடுத்துள்ளார்.            

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...