Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

சங்கங்கள், முதலாளிகள் இணைந்த சுகாதார குழுக்கள் உருவாக்கம்!

T

The Leader Desk

டிசம்பர் 31, 2021 • 4:41 PM

சங்கங்கள், முதலாளிகள் இணைந்த சுகாதார குழுக்கள் உருவாக்கம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய, ஒவ்வொரு ஆடைத் தொழிற்சாலையிலும் அமைக்கப்பட்டுள்ள சுகாதாரக் குழுக்களில் நிர்வாகத்திற்கு மேலதிகமாக தொழிற்சங்கங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன.
  • ஒரு மாதத்திற்குள் பிரச்சினையைத் தீர்ப்பது இரு தரப்பினரின் பொறுப்பு என்பதை ஒப்பந்தம் அங்கீகரித்துள்ளது.
  • சுகாதார அமைச்சு வழங்கிய வழிகாட்டுதல்கள் அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகளும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படுவதை இந்த குழுக்கள் உறுதி செய்யும்.
எழுத்து அளவு:

கொவிட் -19 தொற்றிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கும், உற்பத்தி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும் ஐக்கிய ஆடைத் தொழிற்சங்க மன்றம், சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் சங்கம், இலங்கை சுதந்திர தொழிற்சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு இடையில் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய, ஒவ்வொரு ஆடைத் தொழிற்சாலையிலும் அமைக்கப்பட்டுள்ள சுகாதாரக் குழுக்களில் நிர்வாகத்திற்கு மேலதிகமாக தொழிற்சங்கங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன.

சுகாதார அமைச்சு வழங்கிய வழிகாட்டுதல்கள் அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகளும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படுவதை இந்த குழுக்கள் உறுதி செய்யும்.

"இலங்கையில் மனித வளப் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும், தொற்றுநோய்க்குப் பின்னர் வணிகங்களின் தொடர்ச்சியான உயிர்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கும் முதலாளிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது" என ஐக்கிய ஆடை சங்கங்கள் மன்றத்தின் செயலாளர் நாயகம் டுலி குரே தெரிவித்தார்.

தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தொழிற்துறை முரண்பாடுகளை தீர்ப்பதற்கான பொறிமுறையாக, வெளிப்படையாக தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்படும் தொழிலாளர்களின் குறைகளை மதிப்பாய்வு செய்ய JAAF செயற்குழு மற்றும் தொழிற்சங்க கூட்டுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் பிரச்சினையைத் தீர்ப்பது இரு தரப்பினரின் பொறுப்பு என்பதை ஒப்பந்தம் அங்கீகரித்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தொழிற்சங்கத் தலைவர்கள், இது தொழிலாளர்களின் சங்க சுதந்திரம் மற்றும் கூட்டு பேரம் பேசுவதற்கான உரிமையை அங்கீகரிப்பதாகக் கூறியுள்ளனர்.

"இந்த ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம், இது முடிவெடுக்கும் செயற்பாட்டில் தொழிலாளர்கள் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், குறைகளைத் தீர்ப்பதில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் உதவும்.

இது தொடர்பாக முதலாளிகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என ராஜபக்ச அரசாங்கத்தின் பங்காளியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்த தொழிற்சங்கமான இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லெஸ்லி தேவேந்திர தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...