Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

தொழிலாளர்களின் உரிமைகளை "காகிதத்தடன் மட்டுப்படுத்த வேண்டாம்"!

T

The Leader Desk

டிசம்பர் 31, 2021 • 3:47 PM

தொழிலாளர்களின் உரிமைகளை "காகிதத்தடன் மட்டுப்படுத்த வேண்டாம்"!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த செயற்பாடானது, இலங்கை தொழிலாளர் சட்டம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சிறப்புரிமைகளை மீறும் செயல் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) சுட்டிக்காட்டியுள்ளது.
  • நவ சமசமாஜக் கட்சியுடன் இணைந்த தொழிற்சங்கமான வர்த்தக மற்றும் கைத்தொழில் தொழிலாளர் சங்கத்தின் கிளையை நிறுவியதற்காக கடந்த ஓகஸ்ட் மாதம் வத்துபிட்டிவல ஏடிஜி தொழிற்சாலையில் பணியாற்றிய 16 தொழிலாளர்கள் நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
  • IndustriALL என்பது சுரங்க, எரிசக்தி மற்றும் உற்பத்தித் துறைகளில் இலங்கை உட்பட 140 நாடுகளில் 50 மில்லியன் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பாகும்.
எழுத்து அளவு:

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எழுதிய கடிதத்தில், இன்ரஸ்ரிஓல் (IndustriALL) தொழில்துறை சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு வத்துப்பிட்டிவள சுதந்திர வர்த்தக வலயத்தில் சர்வதேச சந்தைக்கு கையுறைகளை ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனமான ஏ.டி.ஜி கிளவுஸ் நிறுவனத்தின் (ATG Gloves Knitting) தொழிற்சங்க அடக்குமுறை குறித்து கவனம் செலுத்தியுள்ளது.

இந்த செயற்பாடானது, இலங்கை தொழிலாளர் சட்டம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சிறப்புரிமைகளை மீறும் செயல் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) சுட்டிக்காட்டியுள்ளது.

"இந்த தொழிலாளர் பிரச்சினையில் தலையிட்டு விசாரணை செயன்முறையை விரைவுபடுத்த வேண்டும்" என அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அட்லீ ஹுய், தொழில் அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் உடன்படிக்கைகளை ஆவணங்களுடன் மட்டுப்படுத்தாது, சர்வதேச சமூகத்திற்கான அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நவ சமசமாஜக் கட்சியுடன் இணைந்த தொழிற்சங்கமான வர்த்தக மற்றும் கைத்தொழில் தொழிலாளர் சங்கத்தின் கிளையை நிறுவியதற்காக கடந்த ஓகஸ்ட் மாதம் வத்துபிட்டிவல ஏடிஜி தொழிற்சாலையில் பணியாற்றிய 16 தொழிலாளர்கள் நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

நிறுவனத்திற்கு எதிரான வழக்குகளைத் தீர்க்க தொழிலாளர்களை கட்டாயப்படுத்துதல்,

தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கு எதிராக தொழிற்சாலையில் பயிற்சி பட்டறைகளை நடத்துதல்,

கொவிட்-19 சுகாதார வழிமுறைகளை மீறுதல், தொழிற்சங்கத் தலைவர்களை இழிவுபடுத்துதல் மற்றும் தமிழ் தொழிற்சங்கத் தலைவருக்கு எதிராக ஏனைய தொழிலாளர்களை இன ரீதியாகத் தூண்டுதல், போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் நிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கம்பஹா தொழிலாளர் அலுவலகத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 தொழில் திணைக்களம், ஏடிஜி நிறுவனத்திற்கு எதிராக இதுவரை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவில்லை என வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

IndustriALL என்பது சுரங்க, எரிசக்தி மற்றும் உற்பத்தித் துறைகளில் இலங்கை உட்பட 140 நாடுகளில் 50 மில்லியன் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...