Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

இந்த நிலைமைக்கு காரணம் ராஜபக்ஷக்களே ! சம்பிக்க

T

The Leader Desk

டிசம்பர் 29, 2021 • 3:25 PM

இந்த நிலைமைக்கு காரணம் ராஜபக்ஷக்களே ! சம்பிக்க 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
  • இந் நிலையில் நாடு எதிர்க்கொண்டுள்ள நிலைமைக்கு ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் உட்பட ராஜபக்ஷகுடும்பமே பொறுப்புக் கூற வேண்டும்.
  • தற்போதைய அரச முறை கடன் நெருக்கடிக்கு 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பெற்றுக் கொள்ளப்பட்ட வணிக முறைகடன்கள் தற்போதும் தாக்கம் செலுத்துகிறதது.
எழுத்து அளவு:

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், துறைசார் நிபுணர்களையும், திறமையானவர்களையும் அமைச்சுக்களின் செயலாளர்களாகவும், அரச நிறுவனங்களின் தலைவர்களாகவும் நியமிக்க முடியாத நிலையில் ஜனாதிபதி உள்ளார். திறமையானவர்களுக்கு முன்னுரிமை என ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி வெறும் தேர்தல் பிரசாரம் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் தற்போது நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பயனற்ற அபிவிருத்தி திட்டங்கள் மூல காரணியாக காணப்படுகிறது. இந் நிலையில் நாடு எதிர்க்கொண்டுள்ள நிலைமைக்கு ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் உட்பட ராஜபக்ஷகுடும்பமே பொறுப்புக் கூற வேண்டும். தற்போதைய அரச முறை கடன் நெருக்கடிக்கு 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பெற்றுக் கொள்ளப்பட்ட வணிக முறைகடன்கள் தற்போதும் தாக்கம் செலுத்துகிறதது.

வருமானத்தை ஈட்டித்தராத அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், அதிவேக நெடுஞ்சாலை, விளையாட்டு மைதானம், தாமரை தடாக அரங்கம் உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்கள் நாட்டுக்கு எவ்வித இலாபத்தையும் பெற்றுக் கொடுக்கவில்லை. இந்த அபிவிருத்தி பணிகள் ஊடாக அரச நிதி பாரிய அளவில் மோசடி செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...