Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

உங்களது யோசனையை ஏற்க முடியாது! இந்திய எண்ணெய் நிறுவனம்

T

The Leader Desk

டிசம்பர் 26, 2021 • 5:39 PM

உங்களது யோசனையை ஏற்க முடியாது! இந்திய எண்ணெய் நிறுவனம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முதலில் இந்த நிறுவனத்தை உருவாக்கி அதன் பின்னர் அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தமக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • இதில் கூட்டு உடன்படிக்கையின் கீழ் வரும் பண்ணைகளில் 51வீதத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், 49 வீத பங்கை இந்திய எண்ணெய் நிறுவனமும் கொண்டிருக்கும்.
  • அதேநேரம் இந்திய நிறுவனத்துக்கான 14 தாங்கிகளும் 99 வருட குத்தகைக்கு வழங்கப்படும் என்று யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
எழுத்து அளவு:

முதலில் இந்த நிறுவனத்தை உருவாக்கி அதன் பின்னர் அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தமக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிய நிறுவனத்திற்கு “டிரின்கோ பெட்ரோலியம் டேர்மினல் லிமிடெட் ” என்று பெயரிடப்படவுள்ளது.

இந்திய எண்ணெய் நிறுவனத்துடன்(ஐஓசி) யுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் நிலையிலேயே புதிய நிறுவன அமைப்பு பற்றி செய்தி வெளியாகியுள்ளது.

இதேவேளை சீனன்குடாவில் உள்ள லோவர் டேங்க் பண்ணையில் இருந்து 14 எண்ணெய் தொட்டிகளை இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கும் (ஐஓசி), 24 மேல் பண்ணையில் உள்ள 24 தொட்டிகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு வழங்கவும், மீதமுள்ள 61 தொட்டிகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனம் ஆகியன இணைந்து நடத்திச்செல்வதற்கான இலங்கையின் யோசனையை இந்திய எண்ணெய் நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கொழும்பின் ஊடகம ஒன்று தெரிவித்துள்ளது.

இதில் கூட்டு உடன்படிக்கையின் கீழ் வரும் பண்ணைகளில் 51வீதத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், 49 வீத பங்கை இந்திய எண்ணெய் நிறுவனமும் கொண்டிருக்கும்.

அதேநேரம் இந்திய நிறுவனத்துக்கான 14 தாங்கிகளும் 99 வருட குத்தகைக்கு வழங்கப்படும் என்று யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் கடந்த திங்கட்கிழமை, தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் ஒரு சந்திப்பை நடத்தி, சீனக்குடா எண்ணெய் தொட்டி பண்ணை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவித்தார். எனினும் ஜே.வி.பி.யுடன் இணைந்த பெற்றோலிய பொதுத் தொழிலாளர் சங்கம் உட்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கையை கடுமையாக ஆட்சேபித்துள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...