Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மக்கள் கோபத்தில் உள்ளார்கள் எங்களது தொகுதிகளுக்கு செல்ல முடியவில்லை! நாடாளுமன்ற உறுப்பினர்கள்

T

The Leader Desk

டிசம்பர் 26, 2021 • 12:24 PM

மக்கள் கோபத்தில் உள்ளார்கள் எங்களது தொகுதிகளுக்கு செல்ல முடியவில்லை! நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பில் விசேட நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைக்க ஆளும்தரப்பு பின்வரிசை உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
  • விசேடமாக விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மக்கள் வாழும் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகள் மிகவும் தீவிரமடைந்துள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது.
  • மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புக்கு மத்தியில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் பங்குபெற்றுவதற்கு முடியாத நிலைமை உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இது தொடர்பில் விசேட நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைக்க ஆளும்தரப்பு பின்வரிசை உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புக்கு மத்தியில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் பங்குபெற்றுவதற்கு முடியாத நிலைமை உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் தமது தொகுதிகளுக்கு வருவதும் ஆபத்தான நிலைமையாகியுள்ளதென பாதுகாப்பு கோரும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

விசேடமாக விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மக்கள் வாழும் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகள் மிகவும் தீவிரமடைந்துள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது.

ஏற்கனவே உரப் பிரச்சினையால் வருமானம் வீழ்ச்சியடைந்து வாழ்வாதாரத்தில் நெருக்கடியை எதிர்நோக்கும் விவசாயிகள் தற்போது வரையிலும் மிகவும் கோபமாக செயற்பட்டு வருவதாக உறுப்பினர்களின் இந்த கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

கரிம திரவ உரம் என கூறி வழங்கப்பட்டுள்ள துர்நாற்றம் வீசும் கழிவுகளை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாதென விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். தங்கள் பிரதேச பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளுக்கு வரும் வரை அந்த கேன்களுடன் மக்கள் காத்திருப்பதாக ஊடகங்களில் பல முறை குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...