Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

அரசாங்கம் தற்பெருமையில் நாடு அதளபாதாளத்தில்!

T

The Leader Desk

டிசம்பர் 25, 2021 • 10:19 AM

அரசாங்கம் தற்பெருமையில் நாடு அதளபாதாளத்தில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பொருளாதார நிபுணருமான ஹர்ச டி சில்வா இதனை கூறியுள்ளார்.
  • வீதம் முதல் 45 வீத வட்டியில் டொலர்களை பெறுகின்றனர்.
  • புள்ளிவிபரங்களை சமப்படுத்துவதற்காக மக்களுக்கு கடும் தொந்தரவுகளை கொடுத்து எதிர்வரும் 31 ஆம் திகதி வரை டொலரின் விலையை 200 ரூபாய் என்ற நிலையில் வைத்திருக்கின்றனர்.
  • ரூபாயை மிதக்க விட்டால், டொலர் ஒன்றின் விலை 230 ரூபாய் முதல் 240 வரை அதிகரித்து, அரசாங்கத்தின் அனைத்து பொருளாதார நகர்வுகளும் தவறான திசை நோக்கி நகரும்.
எழுத்து அளவு:

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பொருளாதார நிபுணருமான ஹர்ச டி சில்வா இதனை கூறியுள்ளார்.

வங்கிகள் மிகவும் பலவீனமான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளன. எங்கிருந்தும் டொலர்களை பெற முடியாத காரணத்தினால், கைமாற்றாக நாடுகளிடம் இருந்து டொலர்களை பெறுகின்றனர்.

40 வீதம் முதல் 45 வீத வட்டியில் டொலர்களை பெறுகின்றனர். புள்ளிவிபரங்களை சமப்படுத்துவதற்காக மக்களுக்கு கடும் தொந்தரவுகளை கொடுத்து எதிர்வரும் 31 ஆம் திகதி வரை டொலரின் விலையை 200 ரூபாய் என்ற நிலையில் வைத்திருக்கின்றனர்.

ரூபாயை மிதக்க விட்டால், டொலர் ஒன்றின் விலை 230 ரூபாய் முதல் 240 வரை அதிகரித்து, அரசாங்கத்தின் அனைத்து பொருளாதார நகர்வுகளும் தவறான திசை நோக்கி நகரும்.

பொருளாதார வளர்ச்சி வேகம், பணவீக்கம், மொத்த தேசிய உற்பத்திக்கு நிகரான கடன் என அனைத்தும் வீழ்ச்சியை நோக்கி செல்லும். சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வாத இல்லையா என்று ஜனவரி 3 ஆம திகதி கலந்துரையாடவுள்ளனர்.

அரசாங்கம் இந்த தீர்மானத்தை 13 மாதங்களுக்கு முன்னர் எடுத்திருக்க வேண்டும். அரசாங்கம் எந்த வகையிலும் பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளை பெறவில்லை. கமத்தொழில், சுகாதாரம், பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் இதே நிலைமை.

தமது தற்பெருமைக்காக, தமக்கு அனைத்தும் தெரியும், நாங்களே நன்றாக செய்தோம் எனக் கூறி, முழு நாட்டை அதளபாதாளத்திற்குள் தள்ளியுள்ளனர். தயவு செய்து தற்போதாவது நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய பணியாற்றுங்கள் என ஹர்ச டி சில்வா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அரசாங்கம் தற்பெருமையில் நாடு அதளபாதாளத்தில்! | Tamil Leader | We Lead the Nation