Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

உடப்பு பகுதியில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு!

T

The Leader Desk

டிசம்பர் 22, 2021 • 4:43 PM

உடப்பு பகுதியில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதனால், இங்குள்ள பல மீன் வாடிகள், வீடுகள் அழிவடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதுடன் வீதிகளும் கடுமையாக சேமடைந்து காணப்படுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
  • அண்மைக்காலமாக உடப்பு பிரதேசத்தில் கடலரிப்பு மிகவும் தீவிரமடைந்துள்ளதால், அதனைத் தடுக்கும் தற்காலிக நடவடிக்கையாக கரையோரைப் பகுதிகளில் மணல் நிரப்பப்பட்ட மூடைகள் அடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
  • அத்துடன், மீனவர்கள் தங்களின் படகுகளை கரையோரங்களில் நிறுத்தி வைக்க முடியாத நிலையும் உருவாகியுள்ளது.
எழுத்து அளவு:

இதனால், இங்குள்ள பல மீன் வாடிகள், வீடுகள் அழிவடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதுடன் வீதிகளும் கடுமையாக சேமடைந்து காணப்படுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், மீனவர்கள் தங்களின் படகுகளை கரையோரங்களில் நிறுத்தி வைக்க முடியாத நிலையும் உருவாகியுள்ளது.

உடப்பு கிராமத்தில் வாழும் மக்கள் மீன்பிடித் தொழிலை ஜீவனோபாய தொழிலாக மேற்கொண்டு வரும் நிலையில், இவ்வாறு கடலரிப்பால் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதிலும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மக்கள் கூறுகின்றனர்.

அண்மைக்காலமாக உடப்பு பிரதேசத்தில் கடலரிப்பு மிகவும் தீவிரமடைந்துள்ளதால், அதனைத் தடுக்கும் தற்காலிக நடவடிக்கையாக கரையோரைப் பகுதிகளில் மணல் நிரப்பப்பட்ட மூடைகள் அடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், கடலரிப்பை தடுப்பதற்காக கருங்கற்கள் இடப்பட்டுள்ள போதிலும், கடலரிப்பின் தீவிரம் அதிகரித்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அந்த வெள்ள நீரை கடலுக்குள் அனுப்பும் நோக்கில் உடப்பையும் ஆண்டிமுனையையும் இணைக்கும் முகத்துவாரம் பாலத்திற்கு கீழாக வெட்டப்பட்டமையே இந்த பகுதி இவ்வாறு கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளது என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே, கடலரிப்பினால் உடப்புக் கிராமம் முழுமையாக அழிவடையும் முன்னர் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...