Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரிகளின் நடந்து கொண்ட விதம் பாராட்டுக்குரியது ! சந்திரிக்கா

T

The Leader Desk

டிசம்பர் 22, 2021 • 2:58 PM

கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரிகளின் நடந்து கொண்ட விதம் பாராட்டுக்குரியது ! சந்திரிக்கா 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த 17 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பல்கலை வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தலைமையில், இடம்பெற்றிருந்த போது, சில மாணவர்கள் தேரரின் கைகளில் இருந்து பட்டத்தைப் பெற மறுப்பு தெரிவித்திருந்தனர்.
  • மௌனமான அதேசமயம் பலம்வாய்ந்த அறிக்கையில் மாணவர்கள் தமது எதிர்ப்பை மிகவும் ஜனநாயக முறையில் வெளிக்காட்டினர்.
  • இது குறித்து தெரிவிக்கையில் முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்க மேற்கண்டவாறு கூறினார்.
எழுத்து அளவு:

கடந்த 17 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பல்கலை வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தலைமையில், இடம்பெற்றிருந்த போது, சில மாணவர்கள் தேரரின் கைகளில் இருந்து பட்டத்தைப் பெற மறுப்பு தெரிவித்திருந்தனர்.

இது குறித்து தெரிவிக்கையில் முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் அரசாங்கம் தவறான தீர்மானங்களை எடுக்குமாயின் ஜனநாயக நாடு என்ற வகையில் பிரஜைகளுக்கு தமது கருத்து களை வெளியிட உரிமை உண்டு. அதேவேளை நாட்டு மக்கள் ஒன்றிணைந்து ஜனநாயகத்தைப் பாது காப்பதற்காகச் செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

மாணவர், மாணவிகள் தமதும், இலங்கை மக்களதும் ஜனநாயக உரிமைகளை உரிய முறையில் செயற்படுத்தினர். துப்பாக்கிகள் இல்லாது, குண்டுகள் இல்லாது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் அவர்கள் தமது ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டினர்.

மௌனமான அதேசமயம் பலம்வாய்ந்த அறிக்கையில் மாணவர்கள் தமது எதிர்ப்பை மிகவும் ஜனநாயக முறையில் வெளிக்காட்டினர். இந்நிலையில் அன்றைய தினம் இலங்கையில் ஜனநாயகம் வெற்றி பெற்ற நாளாகப் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் பலரும் கருத்துகளைத் தெரிவித்துள்ளபோதும், எனது கருத்தின் படி அன்றைய தினம் தான் நாட்டின் ஜனநாயகம் வென்றதாக நான் நினைக்கிறேன். இளைஞர்கள், யுவதிகள் மிகவும் ஜனநாயகமாக நடந்து கொண்டனர்.

தங்களின் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஏனையவர்களின் சுகத்திரத்துக்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படாது ஏனையவர்களின் மனதைக் காயப்படுத்தாமல் செயற்பட்டனர்.

குறித்த விடயம் தொடர்பாக யாரிடமிருந்தும் கேள்வி கேட்காமல் அரசாங்கம் தவறான தீர்மானம் எடுத்தால் அது குறித்து எதிர்த்து கேள்வி கேட்கும் உரிமை ஜனநாயக நாட்டில் பொது மக்களுக்கு உரிமை உண்டு.

அந்த இளைஞர்கள், யுவதிகள் யார் என்று தெரியவில்லை என்றும் இருப்பினும் தான் முன்னாள் தலைவர் என்ற வகையில் தனது கௌரவத்தை வழங்குவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.    

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரிகளின் நடந்து கொண்ட விதம் பாராட்டுக்குரியது ! சந்திரிக்கா | Tamil Leader | We Lead the Nation