Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

உலகில் எரிபொருள் விலை குறையும் போது இலங்கை எரிபொருள் விலையை உயர்த்துகிறது!

T

The Leader Desk

டிசம்பர் 21, 2021 • 5:28 PM

உலகில் எரிபொருள் விலை குறையும் போது இலங்கை எரிபொருள் விலையை உயர்த்துகிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்க்ணடவாறு குறிப்பிட்டுள்ளார்.
  • டிசம்பர் மாதம் 92 வகை பெற்றோல் பெரல் ஒன்று 85 டொலருக்கே கொண்டுவரப்பட்டிருக்கின்றது.
  • அவ்வாறாயின் ஒரு டொலரின் உத்தியோகபூர் பெறுமதியான 203 என்ற அடிப்படையில் ஒரு பெரல் சுமார் 17,255 ரூபாவாகும்.
  • அதன் பிரகாரம் சாதாரணமாக பெற்றோல் ஒரு லீட்டர் 108 ரூபாவாகும்.
எழுத்து அளவு:

இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்க்ணடவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும்  தெரிவிக்கையில்,

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை குறைந்துசெல்லும் நிலையில் அரசாங்கம் எரிபொருட்களின் விலையை அதிகரித்திருக்கின்றது. மேற்குலகில் பரவிவரும்  கோவிட் தொற்று மற்றும் ஐக்கிய நாடுகள், சீனா மற்றும் இந்தியா தங்களது எண்ணெய் தொகையில் இருந்து ஒரு பகுதியை வர்த்தக சந்தைக்கு விட்டிருப்பதே இதற்கு காரணமாகும்.

2021 டிசம்பர் மாதம் 92 வகை பெற்றோல் பெரல் ஒன்று 85 டொலருக்கே கொண்டுவரப்பட்டிருக்கின்றது. அவ்வாறாயின் ஒரு டொலரின் உத்தியோகபூர் பெறுமதியான 203 என்ற அடிப்படையில் ஒரு பெரல் சுமார் 17,255 ரூபாவாகும்.

அதன் பிரகாரம் சாதாரணமாக பெற்றோல் ஒரு லீட்டர் 108 ரூபாவாகும். அதன் பிரகாரம் 92 வகை பெற்றோல் ஒரு லீட்டர் மூலம் 69 ரூபா இலாபம் பெறப்படுகின்றது.

அதேபோன்று 95 வகை பெற்றோல் லீட்டர் ஒன்றின் மூலம் 99 ரூபா இலாபம் கிடைக்கின்றது.

மேலும் போக்குவரத்து செலவு, கூட்டுத்தாபனத்தின் செலவு விற்பனையாளர்களின் செலவுகள் அனைத்தையும் லீட்டருக்கு 10 ரூபா என எடுத்துக்கொண்டால் 92 வகை பெற்றோல் ஒரு லீட்டர் மூலம் 59 ரூபா இலாபம் பெறப்படுகின்றது.

அதேபோன்று 95 வகை பெற்றோல் லீட்டர் ஒன்றின் மூலம் 89 ரூபா இலாபம் கிடைக்கின்றது. அதேபோன்று இரண்டு வகை டீசல் எண்ணெய்களையும் 85 டொலர்களுக்கே டிசம்பர் மாதம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. அப்படியாயின் இரண்டுவகை டீசல்கள் மூலம் முறையே 26 ரூபா மற்றும் 41ரூ பா என்ற அடிப்படையில் இலாபம் இருக்கின்றது.

அத்துடன் எரிபொருட்களின் விலை அதிகரிக்க முடியுமாக இருப்பது நிதி அமைச்சரின் அனுமதியுடன் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்காகும். ஆனால் எரிபொருட்களின் தேவையை குறைத்துக்கொள்வதற்காக எரிபொருட்களின் விலை அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை மத்திய வங்கியின் ஆளுநரே முன்வைத்தார்.

அதன் பிரகாரம் விலை அதிகரிப்பை கூட்டத்தாபனம் மேற்கொண்டது. அதனால் வலு சக்தி அமைச்சினால் பொதுஜன பெரமுன, பெற்றொலிய கூட்டுத்தாபனம் உட்பட நிறுவனங்களுக்கு பாரிய குற்றச்சாட்டுக்களை தெரிவித்து, விலை அதிகரிப்பை மூடிமறைக்கும் ஊடக சந்திப்பொன்று எதிர்வரும் தினங்களில் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.  

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...