Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

T

The Leader Desk

டிசம்பர் 21, 2021 • 4:56 AM

கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கைக்கான சீனத் தூதுவர் வடக்கிற்கான மூன்று நாள் விஜயத்தை முடித்துக் கொண்ட நிலையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.
  • இராமேஸ்வரம் மீனவர்கள் கடற்படையின் காவலில் உள்ள தமது சக ஊழியர்களை விடுவிக்கக் கோரி நேற்று (19) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
  • நெடுந்தீவுக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் டிசம்பர் 18ஆம் திகதி நள்ளிரவு ஆறு மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில்இழுவைப் படகுகளுடன் 43 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
  • மேலும் 12 இந்திய மீனவர்கள் நேற்று (19) மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

இலங்கைக்கான சீனத் தூதுவர் வடக்கிற்கான மூன்று நாள் விஜயத்தை முடித்துக் கொண்ட நிலையில்  இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. இந்திய-இலங்கை கடல்சார் நெருக்கம் குறித்தும் சீனத் தூதுவர் கேட்டறிந்துள்ளார்.

தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய மீனவர்கள் குறித்த அவசர விவாதத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை மக்களவையில் சமர்ப்பித்துள்ளனர்.

இராமேஸ்வரம் மீனவர்கள் கடற்படையின் காவலில் உள்ள தமது சக ஊழியர்களை விடுவிக்கக் கோரி நேற்று (19) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நெடுந்தீவுக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் டிசம்பர் 18ஆம் திகதி நள்ளிரவு ஆறு மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில்இழுவைப் படகுகளுடன்  43 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். மேலும் 12 இந்திய மீனவர்கள் நேற்று (19) மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கையகப்படுத்தப்படட இந்திய இழுவை படகுகள் தற்போது யாழ்ப்பாணம் மயிலிட்டி கடற்படை முகாமில்  தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

"தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையானது, மன்னார் தெற்கு கடற்பகுதியில் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை துரித அன்டிஜன் பரிசோதனைக்கு அனுப்பிய பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கும், வெளிநாட்டு மீனவர்களை உள்ளடக்கிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் கடற்படை தனது நடவடிக்கைகளை தொடரும்” என கடற்படை தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டார்லின் இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 55 இந்திய மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மத்திய அரசின் உள்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய கடற்றொழில் அபிவிருத்தி திணைக்களம் மற்றும் இந்திய கடற்படையினர் மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கச் சென்றால் பிரச்சினைகள் ஏற்படலாம் என எச்சரித்திருந்தார்.

இந்திய மீனவர்கள் இலங்கையின் மீன் வளத்தை கொள்ளையடிப்பது நீண்டகாலமாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக இருந்து வருகின்றது.

இந்த கொள்ளையை தடுக்க இலங்கை கடற்படை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என வடமாகாண மீனவர் அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இதனால் கடந்த காலங்களில் தமக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக 400 மில்லியன் ரூபாவை வழங்குமாறு வடபகுதி மீனவர்கள் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, வடக்கிற்கான மூன்று நாள் விஜயத்தை முடித்துக் கொண்ட இலங்கைக்கான சீனத் தூதுவர் கி செங், வடக்கில் 2,500 மீனவக் குடும்பங்களுக்கு 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், உலர் உணவுகள் மற்றும் முக்கவசங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அந்தப் பயணத்தின் போது, இந்தியாவை ஒட்டிய இலங்கையின் வடக்குப் பருத்தித்துறையில் உள்ள சாக்கோட்டை முனையையும் அவர் பார்வையிட்டார்.

அந்த இடத்திலிருந்து இந்தியா எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது என இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரிடம் தூதுவர் வினவியபோது, 30 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சீன அதிகாரி ஒருவர் அந்த இடத்திலிருந்து ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டு காணொளி காட்சிகளை பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...