Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

இலங்கையில் இன்று தேசிய பாதுகாப்பும் இல்லை சமையலறை பாதுகாப்பும் இல்லை! சிங்கள ராவய

T

The Leader Desk

டிசம்பர் 20, 2021 • 2:52 PM

இலங்கையில் இன்று தேசிய பாதுகாப்பும் இல்லை சமையலறை பாதுகாப்பும் இல்லை! சிங்கள ராவய

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடு இன்று பல்வேறு கூறுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
  • அவரை கைதுசெய்தால் கூட்டுச்சதி வெளியாகி விடும் என்ற காரணத்தினாலேயே அவர் கைதுசெய்யப்படவில்லை என்று தயாரட்ன தேரர் தெரிவித்தார்.
  • லிட்ரோ நிறுவன தலைவருக்கு மாத சம்பளமாக 20 லட்சம் ரூபா வழங்கப்படுகிறது.
  • இதேவேளை நிகழ்வில் உரையாற்றிய சிங்கள ராவயவின் செயலாளர், எதிர்வரும் மார்ச் அளவில், அரிசி கிலோ ஒன்றின் விலை 500 ரூபாவாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக தெரிவித்தார்.
எழுத்து அளவு:

அரசாங்கத் தரப்பினர் டொலர்களை தேடி வெளிநாடுகளுக்கு  சென்று வருவது தொடர்பில்  சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்

கட்சியின் கூட்டம் ஒன்று காலியில் இடம்பெற்றபோது உரையாற்றிய அவர், இலங்கையில் இன்று சிங்கள பௌத்தர்களுக்காக பேசுவதற்காக எவரும் இல்லை என்று குறிப்பிட்டார்

எனவே அதனை நிவர்த்திக்கும் வகையிலேயே சிங்கள ராவய அரசியலுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாடு இன்று பல்வேறு கூறுகளாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் தாம் உட்பட்ட இலங்கை மக்களும் இரசிய உடன்பாட்டின் கீழ் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் இன்று தேசிய பாதுகாப்பும் இல்லை. சமையலறை பாதுகாப்பும் இல்லை. சமையலறையில் எரிவாயு வெடிப்புக்கள் இடம்பெறுவது தொடர்பில் அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

அனுமதியின்றி லிற்றோ எரிவாயு கொள்கலன் கலவையை மாற்றியமைக்காக லிற்றோ நிறுவன தலைவரை கைதுசெய்யவில்லை. அவரை கைதுசெய்தால் கூட்டுச்சதி வெளியாகி விடும் என்ற காரணத்தினாலேயே அவர் கைதுசெய்யப்படவில்லை என்று தயாரட்ன தேரர் தெரிவித்தார்.

லிட்ரோ நிறுவன தலைவருக்கு மாத சம்பளமாக 20 லட்சம் ரூபா வழங்கப்படுகிறது. இது பலருக்கு ஒரு வருடத்தின் மொத்த சம்பளமாகக் கூட இருக்காது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் லிட்ரோ தலைவருக்கு வழங்கப்படும் இந்த சம்பளம், சமையலறைகளில் வெடிப்புக்களை ஏற்படுத்துவதற்காகவா வழங்கப்படுகிறது என்று தயாரட்ன கேள்வி எழுப்பினார்.

இதேவேளை நிகழ்வில் உரையாற்றிய சிங்கள ராவயவின் செயலாளர், எதிர்வரும் மார்ச் அளவில், அரிசி கிலோ ஒன்றின் விலை 500 ரூபாவாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக தெரிவித்தார்.

எனவே நாட்டை கடனில் இருந்து மீட்டு, இலங்கையின் சிங்கக்குட்டிகள் தமது அரசியலை முன்னெடுத்துச் செல்ல சிங்கள ராவய களத்தை அமைத்து தரும் என்றும் அவர் தெரிவித்தார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...