Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

அரசாங்கம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்!

T

The Leader Desk

டிசம்பர் 20, 2021 • 1:16 PM

அரசாங்கம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் உர நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரான காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
  • இவ்வாறான நெருக்கடியின் போது அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எவ்வாறு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொள்கின்றனர் என அவர் கேள்வி எழுப்பியதுடன், தற்போதைய நிலைமையை ஏன் தற்போதைய நிர்வாகத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
  • இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் உர நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரான காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளே மரக்கறி மற்றும் அரிசியின் விலை அதிகரிப்புக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விவசாய சமூகம் தமது செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு உரிய உரங்களை உரிய நேரத்தில் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் எனினும் அரசாங்கம் அதனைச் செய்யத் தவறியதால் விவசாய சமூகம் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் பட்சத்தில் இயற்கை உரம் மற்றும் இழப்பீடு வழங்குவதாக விவசாய அமைச்சர் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நெருக்கடியின் போது அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எவ்வாறு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொள்கின்றனர் என அவர் கேள்வி எழுப்பியதுடன், தற்போதைய நிலைமையை ஏன் தற்போதைய நிர்வாகத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எரிவாயு வெடிப்பினால் சேதமடைந்த வீடுகள் மற்றும் சமயலறைகளுக்கு இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிவாயு சிலிண்டர்களை திரும்பப் பெறுவதற்கும், பொது மக்களுக்கு பணத்தினை திரும்ப செலுத்தவும், மாற்று சிலிண்டர்களை வழங்குவதற்கும் அரசாங்கம் ஏன் தலையிடவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

குழுக்களை நியமிப்பதை விட தற்போதைய நிர்வாகம் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், சர்ச்சைக்குரிய பத்திரப் பரிவர்த்தனை, சீனி ஊழல், பூண்டு ஊழல் தொடர்பாக அரசாங்கம் நியமித்த குழுக்கள் பலனளிக்கவில்லை.

எரிவாயு சிலிண்டரில் ஸ்டிக்கர் ஒட்டுவதால் எந்தப் பயனும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அரசாங்கம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்! | Tamil Leader | We Lead the Nation