Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

முல்லைத்தீவு மூங்கிலாறில் கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!

T

The Leader Desk

டிசம்பர் 20, 2021 • 12:38 PM

முல்லைத்தீவு மூங்கிலாறில் கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறித்த சிறுமி கடந்த 15 ஆம் திகதி காணாமல் போனதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயாரால் முறைப்பாடு பதிவு செய்யபட்டுள்ளது.
  • அதன்படி வன்புனர்வுக்கு உள்ளாகி கருத்தரித்த பின்னர் சட்ட விரோதமான முறையில் கருக்கலைப்புக்கு முயற்சித்து அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டு சிறுமி உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  • அதற்கு அமைவாக நான்கு நாள் தேடுதலின் பின்னர் கைவிடப்பட்ட வளவு ஒன்றில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
எழுத்து அளவு:

குறித்த சிறுமி கடந்த 15 ஆம் திகதி காணாமல் போனதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயாரால் முறைப்பாடு பதிவு செய்யபட்டுள்ளது. அதற்கு அமைவாக நான்கு நாள் தேடுதலின் பின்னர் கைவிடப்பட்ட வளவு ஒன்றில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

பின்னர் சிறுமியின் சடலம் மீதான சட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நேற்றைய தினம் மருத்துவ அறிக்கை வெளியாகியிருந்தது. அதன்படி வன்புனர்வுக்கு உள்ளாகி கருத்தரித்த பின்னர் சட்ட விரோதமான முறையில் கருக்கலைப்புக்கு முயற்சித்து அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டு சிறுமி உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி மூங்கிலாறு கிராமத்தின் பெண்கள்,சிறுவர்கள்,இளைஞர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து கறுப்புக் கொடிகள் மற்றும் கறுப்பு பட்டிகளை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மூங்கிலாறு சந்தியிலிருந்து உடையார்கட்டு மகா வித்தியாலயம் வரை பேரணியாகச் சென்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

முல்லைத்தீவு மூங்கிலாறில் கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்! | Tamil Leader | We Lead the Nation