Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

ஷாஹிர் ஹான் பாரூக் எனும் சுதந்திர ஊடகவியலாளருக்கு அக்கரைப்பற்று பொலிஸார் அச்சுறுத்தல்!

T

The Leader Desk

டிசம்பர் 19, 2021 • 12:25 PM

ஷாஹிர் ஹான் பாரூக் எனும் சுதந்திர ஊடகவியலாளருக்கு அக்கரைப்பற்று பொலிஸார் அச்சுறுத்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உடனே நான் மோட்டார் சைக்கிளை அந்த இடத்தில் நிறுத்தினேன்.
  • இதேவேளை, நீ யாருடன் மோதுகிறாய் என்று உனக்கு தெரியாதா?
  • அதன் பின்னரே அவர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி என்பதையும் அவர் சிவிலுடையில் வந்துள்ளதையும் அவதானித்தேன்.
எழுத்து அளவு:

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

தனது பிரத்தியோக வேலை ஒன்றுக்காக அக்கரைப்பற்று பிரதான வீதியில் இருக்கின்ற முஸ்லிம் மையவாடிக்கு முன்னால் நேற்று (18) தான் மோட்டார் சைக்கிளில் இரவு 8.35 மணியளவில் பயணம் செய்த போது காரின் அருகில் நின்றிருந்த ஒருவர் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கட்டளையிட்டு கை சைகை ஊடாக கேட்டுக் கொண்டார்.

உடனே நான் மோட்டார் சைக்கிளை அந்த இடத்தில் நிறுத்தினேன். அதன் பின்னரே அவர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி என்பதையும் அவர் சிவிலுடையில் வந்துள்ளதையும் அவதானித்தேன்.

உடனே அவர் கடும் கோபத்துடன் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் நான் வழக்கு பதிந்துள்ளதாகவும் நான் பதிந்துள்ள வழக்கை மீள பெற வேண்டும் என்றும் அப்படி இல்லாவிட்டால் என்னை இந்த மையவாடிக்கு வெகுவிரைவில் புதைப்பேன் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, நீ யாருடன் மோதுகிறாய் என்று உனக்கு தெரியாதா? வருகின்ற வாரத்துக்குள் மனித உரிமை ஆணைக்குழுவில் பதியப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும், இல்லையென்றால் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் நீ இடம் பிடிப்பாய், அல்லது உயிருடன் புதைக்கபடுவாய் என்று குறித்த நபரை அச்சுறுத்தி விட்டு சென்றார்.

இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை அன்று (02.09.2021) செய்தி ஒன்றை சேகரிப்பதற்காக எனது வீட்டில் இருந்து வெளியில் வந்து வீட்டுக்கு முன்னால் செய்தி சேகரிக்க தயாராகும்போது வீதியால் சென்ற அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு என்னை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி காயப்படுத்தி இழுத்துச் சென்ற காட்சிகள் செய்திகளில் வெளிவந்திருந்தது.

இதன் தொடர்ச்சியாகவே தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக மனித உரிமைகள் மீறல் விசாரணை வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளேன். இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டே இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...