Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

தொழிலாளர்கள் வேலைக்கு செல்வார்கள் ஆனால் கொழுந்து வெளியே செல்லாது! ஜீவன்

T

The Leader Desk

டிசம்பர் 19, 2021 • 8:53 AM

தொழிலாளர்கள் வேலைக்கு செல்வார்கள் ஆனால் கொழுந்து வெளியே செல்லாது! ஜீவன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அக்கரபத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள், நாளை (20.12.2021) திங்கட்கிழமை முதல் பணிக்கு திரும்புவார்கள் எனவும், நிர்வாகத்திடமிருந்து எழுத்து மூல உத்தரவாதம் கோரப்பட்டுள்ளதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
  • இந்நிலையில் அக்கரபத்தனை, டயகம ஆகிய தோட்டங்களுக்கு நேற்று (18.12.2021) பயணம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இதொகா பிரமுகர்கள், தொழிலாளர்களுடன் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
  • மற்றையவர்கள் போல மக்களை வீதிக்கு இறக்கி கொரோனா பரப்பவில்லை.
எழுத்து அளவு:

அக்கரபத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள், நாளை (20.12.2021) திங்கட்கிழமை முதல் பணிக்கு திரும்புவார்கள் எனவும், நிர்வாகத்திடமிருந்து எழுத்து மூல உத்தரவாதம் கோரப்பட்டுள்ளதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அக்கரபத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் கடந்த 7 நாட்களாக பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

நிர்வாகங்களின் கெடுபிடிகளுக்கு எதிராகவும், தமது தொழில் உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுமே அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இ.தொ.கா. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தன.

இது தொடர்பில் அட்டனிலுள்ள தொழில் திணைக்களத்தின் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் அக்கரபத்தனை, டயகம ஆகிய தோட்டங்களுக்கு நேற்று (18.12.2021) பயணம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இதொகா பிரமுகர்கள், தொழிலாளர்களுடன் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடினர். நிர்வாகத் தரப்பில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் பற்றியும் விவரித்தனர்.

அந்தவகையில் தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக கைவிடுவதற்கும், திங்கள் முதல் வேலைக்கு திரும்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியவை வருமாறு,

“அக்கரபத்தனை பிளான்டேசன், தொழிலாளர்களை மிகவும் மோசமாக நடத்தியுள்ளது. ஈ.டிஎவ், ஈ.பி.எவ் போன்ற கட்டணங்களும் செலுத்தப்படாமல் உள்ளன. தொழிலாளர்கள் கூடுதல் கொழுந்து பறிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நாம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தோம். இதற்கு ஏனைய தொழிற்சங்கங்களின் தலைவர் மார் முழுமையான ஆதரவை வழங்கினர். அதற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தோட்டத் தொழிலாளர்களை நெருக்கடிக்குள் தள்ளாமல் வீட்டில் இருந்து போராடுமாறு நாம் அழைப்பு விடுத்தோம். மற்றையவர்கள் போல மக்களை வீதிக்கு இறக்கி கொரோனா பரப்பவில்லை. அப்படி இருந்தும் நாங்கள் நாடகமாடுவதாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சிக்கின்றனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கமாட்டோம். ஏனெனில் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்களை நாம் விமர்சிப்பதில்லை என முடிவெடுத்துள்ளோம். மற்றையவர்களை தாக்கி பேசி, விமர்சனங்களை முன்வைப்பதற்காக மக்கள் எம்மை நாடாளுமன்றம் அனுப்புவும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அக்கரபத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்டங்களில் வாழும் தொழிலாளர்களின் ஈ.பி.எவ், ஈ.டி.எவ் உள்ளிட்ட கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும், அதற்கான கால எல்லையுடன் வரைவு திட்டத்தை முன்வைக்குமாறு வலியுறுத்தியுள்ளோம். அதேபோல ஈ.பி.எவ், ஈ.டி.எவ் உள்ளிட்ட கொடுப்பனவுகளை எடுக்காமல் உயிரிழந்தவர்களின் கொடுப்பனவுகள், அவர்களின் பிள்ளைகளுக்கு வழங்குவதற்கான முன்மொழிவும் அவசியம்.

அதேபோல பறிக்கப்படும் கொழுந்தின் அளவில் அதிகரிப்பு இடம்பெறக்கூடாது, கழிபடும் கிலோ அளவும் குறைக்கப்பட வேண்டும் என கூறியுள்ளோம். இதற்கு நிர்வாகத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். வாய்மூல உத்தரவாதத்தை நம்ப முடியாது. எனவே, எழுத்துமூல உத்தரவாதம் அவசியம். அதனை கோரியுள்ளோம்.

எனவே, திங்கள் முதல் தொழிலாளர்கள் வேலைக்கு செல்வார்கள். சம அளவில்தான் கொழுந்து பறிப்பார்கள். நிர்வாகம் எமக்கு வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்படாவிட்டால், தொழிலாளர்கள் வேலைக்கு செல்வார்கள், ஆனால் அக்கரபத்தனையை விட்டு கொழுந்து வெளியே செல்லாது என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம். அதேபோல எமது தொழிற்சங்க நடவடிக்கையும் கடுமையாக இருக்கும். எழுத்துமூல உத்தரவாதம் கிட்டும் வரை இது விடயத்தில் வெற்றியென நாம் கருதமாட்டோம். ” – என்றார்.

kuruvi.lk

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...