Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழு விரைவில் இலங்கைக்கு விஜயம்!

T

The Leader Desk

டிசம்பர் 17, 2021 • 5:57 PM

அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழு விரைவில் இலங்கைக்கு விஜயம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமெரிக்க அதிகாரிகள் அடுத்த வருடம் இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினரையும் சந்திக்கவுள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் மார்ட்டின் கெல்லி தெரிவித்துள்ளார்.
  • தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீதிக்காக குரல் கொடுப்பவர்களுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமெரிக்க பிரதித் தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.
  • நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களை அமெரிக்காவிற்கு விஜயம் செய்து அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அமெரிக்க தூதரக அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
எழுத்து அளவு:

அமெரிக்க அதிகாரிகள் அடுத்த வருடம் இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினரையும் சந்திக்கவுள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் மார்ட்டின் கெல்லி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களை அமெரிக்காவிற்கு விஜயம் செய்து அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அமெரிக்க தூதரக அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

“தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டுப் பேச்சுவார்த்தையின் பின்னர், இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச கோரிக்கைகள் அடங்கிய பொதுவான ஆவணத்தை சர்வதேச சமூகம் சந்திப்போம்” என இதற்குப் பதிலளித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டுச் செயற்பாடுகள், மலையக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இலங்கையின் தேசியப் பிரச்சினையில் அமெரிக்காவின் வகிபாகம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்காலக் கூட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் அமெரிக்காவுக்கான இரண்டாவது துணைத் தூதுவர் சூசன் வோல்க், அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெப்ரி சுனின், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச் செயலாளர் சந்திரா சாப்டர், நிதித்துறைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார், பேராசிரியர் விஜயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, டிசம்பர் 13ஆம் திகதி கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள கடற்றொழில் அமைச்சுக்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் மார்ட்டின் கெல்லி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் மத்தியில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் ஒருங்கிணைந்த கொள்கையின் அவசியம் குறித்து கலந்துரையாடினார்.

தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீதிக்காக குரல் கொடுப்பவர்களுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமெரிக்க பிரதித் தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேச சமூகத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் கொழும்பில் கூடி எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழு விரைவில் இலங்கைக்கு விஜயம்! | Tamil Leader | We Lead the Nation