Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

பெண்களை பசுக்கள் போல சித்தரித்து தென்கொரியாவின் பால் விளம்பரம்! உலக அளவில் பெரும் சர்ச்சை

T

The Leader Desk

டிசம்பர் 17, 2021 • 4:20 AM

பெண்களை பசுக்கள் போல சித்தரித்து தென்கொரியாவின் பால் விளம்பரம்! உலக அளவில் பெரும் சர்ச்சை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சியோல் மில்க் நிறுவனம் வெளியிட்ட விளம்பர வீடியோவில் பெண்களை பசுமாடுகள் போல் சித்தரித்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
  • அப்போது, அவர் கிழே கிடக்கும் மரத்துண்டில் தனது காலை வைத்ததால் அது உடைகிறது.
  • இதனைதொடர்ந்து தூய்மையான நீர், ஆரோக்கியமான உணவு, 100 சதவிகிதம் சியோல் பால்.
எழுத்து அளவு:

சியோல் மில்க் நிறுவனம் வெளியிட்ட விளம்பர வீடியோவில் பெண்களை பசுமாடுகள் போல் சித்தரித்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட விளம்பர வீடியோவில், ஒரு நபர் காட்டுப்பகுதியில் கேமராவை எடுத்துக்கொண்டு செல்கிறார்.

அங்கு புல்வெளி நிறைந்த பகுதியில் சில பெண்கள் வெள்ளை நிற உடையணிந்து ஓடையில் ஓடும் நீரை குடிப்பது போன்றும், யோகா செய்வது போன்றும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அதை அந்த நபர் வீடியோவாக பதிவு செய்கிறார். அப்போது, இயற்கையை அதன் தூய்மையில் பாதுகாக்கும் ஒரு அழகிய இடத்தில் அவற்றை கேமராவில் படம்பிடிப்பதில் இறுதியாக நாங்கள் வெற்றி பெற்றோம். இயற்கையில் இருந்து தூய்மையான நீரை அவர்கள் குடிக்கின்றனர். இயற்கையான உணவுகளையே உட்கொள்கின்றனர். அமைதியான சூழ்நிலையில் அமைதியாக வாழ்கின்றனர். நான் அவர்கள் அருகில் கவனமுடன் செல்ல முயற்சிக்கிறேன்’ என்கிறார்.

அப்போது, அவர் கிழே கிடக்கும் மரத்துண்டில் தனது காலை வைத்ததால் அது உடைகிறது. அந்த சத்தத்தை கேட்ட அப்பெண்கள் திடீரென பசு மாடுகளாக மாறுகின்றனர். இதனைதொடர்ந்து தூய்மையான நீர், ஆரோக்கியமான உணவு, 100 சதவிகிதம் சியோல் பால். இயற்கையான சூழ்நிலையில் இருந்து இயற்கையான பால்’ என அந்த விளம்பரம் முடிவடைகிறது.

பெண்களை பசுக்கள் போல் சித்தரித்து காட்சிப்பொருளாக்கி பால் விளம்பரம் செய்ததாக சியோல் பால் உற்பத்தி நிறுவனம் மீது உலக அளவில் கண்டனம் எழுந்தது. சியோல் பால் நிறுவனத்தின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்  என தென் கொரியாவில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. இதனால், சியோல் பால் உற்பத்தி நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை பெருமளவு சரிந்தது.

உலகலாவிய சர்ச்சையை தொடர்ந்து பெண்களை பசுக்கள் போல் சித்தரித்து விளம்பரம் எடுத்ததற்க்கு சியோல் பால் உற்பத்தி நிறுவனம் மன்னிப்புக்கோரியது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பெண்களை பசுக்கள் போல சித்தரித்து தென்கொரியாவின் பால் விளம்பரம்! உலக அளவில் பெரும் சர்ச்சை | Tamil Leader | We Lead the Nation