Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

பத்தொன்பது மாதங்களுக்குப் பிறகு பிணையில் வெளிவந்த கவிஞர் அஹ்னாப் ஜஸீம்!

T

The Leader Desk

டிசம்பர் 15, 2021 • 6:16 PM

பத்தொன்பது மாதங்களுக்குப் பிறகு பிணையில் வெளிவந்த கவிஞர் அஹ்னாப் ஜஸீம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அஹ்னாப் தலா 300,000 ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.
  • டிசம்பர் 15 புதன்கிழமை (இன்று) தெரிவித்தாவது ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அவரை புத்தளம் பயங்கரவாதத் தடுப்புச் சட்ட அலுவலகத்திற்கு சென்று கையொப்பமிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.
  • அஹ்னாப் ஜசீமின் வெளிநாட்டுப் பயணத்திற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீம், 2020 மே 20 அன்று பொலிஸ் பயங்கரவாத ஒடுக்குமுறை மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
எழுத்து அளவு:

அஹ்னாப் தலா 300,000 ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார். ஜசீமை விடுதலை செய்ய உத்தரவிட்ட புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நவோமி விக்கிரமசிங்க, .டிசம்பர் 15 புதன்கிழமை (இன்று) தெரிவித்தாவதுஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அவரை புத்தளம் பயங்கரவாதத் தடுப்புச் சட்ட அலுவலகத்திற்கு சென்று கையொப்பமிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அஹ்னாப் ஜசீமின் வெளிநாட்டுப் பயணத்திற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீம், 2020 மே 20 அன்று பொலிஸ் பயங்கரவாத ஒடுக்குமுறை மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அவரது அடிப்படை உரிமை மனு டிசம்பர் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, ​​அஹ்னாப் ஜசீமுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் எதிர்க்கவில்லை என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

புத்தளம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போது, ​​அஹ்னாப்பிற்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் எதிர்க்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி நெரின் புள்ளே நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

2017 ஆம் ஆண்டு நவரசம் கவிதைத் தொகுப்பை வௌியிட்டு மாணவர்கள் 'தீவிரவாத சித்தாந்தத்தைப்' பின்பற்ற ஊக்குவித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மன்னார் அஹ்னாப் என்று தமிழ் வாசகர்களிடையே பிரபலமாக அறியப்பட்ட அஹ்னாப் ஜசீம், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினால் (CTID) கைது செய்யப்பட்டார். 

மே 16, 2020 அன்று கைது செய்யப்பட்ட அவர், கடந்த ஜூன் மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...