Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

கேப்டன் வருண் சிங் உடல் நாளை போபால் கொண்டு செல்லப்படுகிறது!

T

The Leader Desk

டிசம்பர் 15, 2021 • 4:37 PM

 கேப்டன் வருண் சிங் உடல் நாளை போபால் கொண்டு செல்லப்படுகிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், குரூப் கேப்டன் வருண்சிங் உள்பட 14 பேர், கடந்த 8-ந் தேதி தமிழ்நாட்டில் உள்ள கோவை சூளூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்றனர்.
  • அது கீழே விழுந்து தீப்பிடித்ததில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர்.
  • பின்னர் மேல்-சிகிச்சைக்காக மறுநாள் 9-ந் தேதி அவர் விமானத்தில் பெங்களூரு அழைத்து வரப்பட்டார்.
  • வென்டிலேட்டர் உள்ளிட்ட உயிர் காக்கும் கருவிகளை பொருத்தி அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
எழுத்து அளவு:

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், குரூப் கேப்டன் வருண்சிங் உள்பட 14 பேர், கடந்த 8-ந் தேதி தமிழ்நாட்டில் உள்ள கோவை சூளூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்றனர்.

அப்போது குன்னூர் அருகே சென்றபோது, அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. அது கீழே விழுந்து தீப்பிடித்ததில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். குரூப் கேப்டன் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு குன்னூர் வெலிங்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேல்-சிகிச்சைக்காக மறுநாள் 9-ந் தேதி அவர் விமானத்தில் பெங்களூரு அழைத்து வரப்பட்டார். இங்குள்ள கமாண்டோ ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வென்டிலேட்டர் உள்ளிட்ட உயிர் காக்கும் கருவிகளை பொருத்தி அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

அவருக்கு உடலில் 80 சதவீதம் அளவுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதால், அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை வருண்சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக விமானப்படை அறிவித்தது. இதன் மூலம் அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரும் மரணம் அடைந்துவிட்டனர். ஹெலிகாப்டரில் பயணித்த அனைவருமே உயிரிழந்ததால் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், குரூப் கேப்டன் வருண் சிங் உடல் நாளை இந்திய விமானப்படை மூலம் நாளை போபால் கொண்டு செல்லப்படும் என இந்திய விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வருண் சிங் உடலுக்கு இறுதிச்சடங்குகள் வரும் 17 ஆம் தேதி நடைபெறும் எனவும் விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...