Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மக்களுடன் கலந்துரையாடி, துயரங்களை பகிர்ந்துகொள்ளும் நேரமிது! அநுர பிரியதர்சன யாப்பா

T

The Leader Desk

டிசம்பர் 15, 2021 • 10:08 AM

மக்களுடன் கலந்துரையாடி, துயரங்களை பகிர்ந்துகொள்ளும் நேரமிது! அநுர பிரியதர்சன யாப்பா

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடு தற்போது முகங்கொடுத்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடி, துயரங்களை பகிர்ந்துகொள்ளும் நேரமிது.
  • ஆனால், இங்க எதுவும் தெரியாததைப்போன்று இருக்கின்றனர் என்றார்.
  • அப்போது தான் மக்களிடம் நம்பிக்கையை கட்டியெழுப்பலாம்.
எழுத்து அளவு:

நாடு தற்போது முகங்கொடுத்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடி, துயரங்களை பகிர்ந்துகொள்ளும் நேரமிது. அப்போது தான் மக்களிடம் நம்பிக்கையை கட்டியெழுப்பலாம். அந்த நம்பிக்கையை கட்டியெழுப்பவதற்காக எமக்கிருக்கும் சந்தர்ப்பத்தை சிந்தனையுடன் பயன்படுத்த வேண்டும் என்றார்.

குறைந்தது இந்த சமையல் எரிவாயு பிரச்சினைக்கு கூட யார் பொறுப்பென தெரியவில்லை. வேறு நாட்டில் இவ்வாறு இடம்பெற்றிருந்தால் குறித்த நிறுவனங்களின் பிரதானிகள் கைது செய்யப்பட்டிருப்பர். ஆனால், இங்க  எதுவும் தெரியாததைப்போன்று இருக்கின்றனர் என்றார்.

இவ்வாறான நிலையானது நாட்டில் அராஜகத்துக்கான வழியை ஏற்படுத்தும் என தெரிவித்த அவர், இன்று நாட்டை வழிநடத்த அமைச்சரவைக்கு அப்பால்யாரோ உள்ளனர் என்றார்.

நாட்டை வழிநடத்தும் தலைவரிடம் அவரைச் சூழவுள்ள அதிகாரிகள் பல போலி விடயங்களை கூறுகின்றனரென நினைக்கிறேன் என தெரிவித்த அவர், அதனால் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினை அனைவரும் ஒன்றுகூடி கலந்துரையாட வேண்டிய விடயமாகும் என்றார்.

இந்த மாதம் நிறைவடைவதற்குள் அந்நிய செலாவணியை கொண்டு வருகிறோம் என, கூறுகின்றனர். ஆனால், அது ஒருபோதும் நடக்காதென அவர்களுக்கும் தெரியும் கேட்டுக்கொண்டிருக்கும் எமக்கும் தெரியும் என்றார். முறையான பொறிமுறையொன்று இன்மையே அந்நிய செலாவணி எமக்கு கிடைக்காமைக்கான பிரதான காரணமாகும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...