Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

உலக மனித உரிமை தினத்தை அனுஷ்டிக்க நீதிமன்றத் தடை!

T

The Leader Desk

டிசம்பர் 14, 2021 • 4:44 PM

உலக மனித உரிமை தினத்தை அனுஷ்டிக்க நீதிமன்றத் தடை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் கண்டி மேலதிக நீதவான் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
  • என்பது போன்ற காரணங்கள் குறித்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பாராட்டைப் பெறும் குடும்ப உறுப்பினர்கள் வெவ்வேறு இன மற்றும் மத குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, பாராட்டுக்கான தெரிவில், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சந்தேநபர்களா?
எழுத்து அளவு:

இலங்கையின் அனைத்து பிரதான சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மலையகத்தில் நடத்தப்படவிருந்த இந்த நிகழ்வு, இன ஒற்றுமைக்கு பாதகமாக அமையும் எனக் குறிப்பிடப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. 

"கைதிகளின் கௌரவம் மற்றும் மனித நிலைமைகளுக்கான அவர்களின் உரிமைகளை உறுதி செய்தல்" என்ற தொனிப்பொருளின் கீழ், டிசம்பர் 11ஆம் திகதி  உலக மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிப்பதற்கு, நீதிமன்ற உத்தரவு ஊடாக காவல்துறை தடை வித்ததாக, கண்டி மனித உரிமைகள் அலுவலகம் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் கண்டி மேலதிக நீதவான் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

”மன உளைச்சல், பொருளாதார பிரச்சினைகள், சமூக மற்றும் பிற சவால்களுக்கு மத்தியில் நியாயமான விசாரணை, சட்டத்தின் ஆட்சிக்காக பங்களிப்பு வழங்கிய 22 கைதிகளின் குடும்பங்களின் நீண்ட கால போராட்டத்தை பாராட்டுவதற்கு தயாராகவிருந்தோம்.” என கண்டி மனித உரிமைகள் நிலையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை நந்தன மானதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு மற்றும் செயற்பாடுகள் பற்றிய விபரங்களை, கண்டி மனித உரிமைகள் நிலையம் காவல்துறைக்கு வழங்கியிருந்த இந்த நிகழ்வை பிற்காலத்தில் நடத்துமாறும், விடுதலைப் புலிகள் சந்தேகநபர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளின் குடும்பங்கள் இதில் பங்கேற்கக்கூடாது எனவும் கண்டி சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

பாராட்டைப் பெறும் குடும்ப உறுப்பினர்கள் வெவ்வேறு இன மற்றும் மத குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, பாராட்டுக்கான தெரிவில், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சந்தேநபர்களா? குற்றம் சாட்டப்பட்டவர்களா? அல்லது தண்டனை விதிக்கப்பட்டவர்களா? என்பது போன்ற காரணங்கள் குறித்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பாராட்டைப் பெறுபவர்கள் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றத் தொடங்கினர், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நீதிமன்ற வழக்குகள் நிறைவடைந்த பின்னரும் எங்களுடன் இருந்தனர். அவர்கள் மனித உரிமைப் பாதுகாவலர்களாக மாறி, உயிர் பிழைத்த மற்றவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர், ” என அருட்தந்தை நந்தன மானதுங்க கூறியுள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட கைதிகள், அவர்களது குடும்பத்தினர், மதத் தலைவர்கள், சட்டத்தரணிகள், ஐ.நா ஊழியர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளை இந்நிகழ்வுக்கு அழைத்திருந்த போதிலும் காவல்துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

உலக மனித உரிமை தினத்தை அனுஷ்டிக்க நீதிமன்றத் தடை! | Tamil Leader | We Lead the Nation