Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

தாதியர் சங்கம் ஜே.வி.பி வசம்!

T

The Leader Desk

டிசம்பர் 14, 2021 • 11:31 AM

தாதியர் சங்கம் ஜே.வி.பி வசம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த தாதியர் சபை (நர்சிங் கவுன்சில்,) 1988 ஆம் ஆண்டு பாராளுமன்ற சட்டத்தின் மூலம் செவிலியர் துறையில் கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுக்கவும், பணியாளர்கள் மற்றும் செவிலியர்களின் இடமாற்றம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் முடிவுகளை எடுக்கவும் நிறுவப்பட்ட அதிகாரப்பூர்வ அமைப்பாகும்.
  • இத்தேர்தலில் ஜே.வி.பி இன் தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை தாதியர் சங்கம் 66% வாக்குகளை பெற்றுள்ளதுடன் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பிரதிநிதித்துவம் செய்யும் பொதுச்சேவை ஐக்கிய தாதியர் சங்கம் 17% வாக்குகளை பெற்றுள்ளதுடன்.
  • சமன் ரத்னப்பிரியவின் அரச தாதியர் சங்கம் 16% வாக்குகளை பெற்றுள்ளது.
  • இதன்படி, தெரிவு செய்யப்படவுள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 ஆகும்.
எழுத்து அளவு:

இந்த தாதியர் சபை (நர்சிங் கவுன்சில்,) 1988 ஆம் ஆண்டு பாராளுமன்ற சட்டத்தின் மூலம் செவிலியர் துறையில் கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுக்கவும், பணியாளர்கள் மற்றும் செவிலியர்களின் இடமாற்றம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் முடிவுகளை எடுக்கவும் நிறுவப்பட்ட அதிகாரப்பூர்வ அமைப்பாகும்.

அனைத்து தாதியர் சேவையில் உள்ள 40,000 ஊழியர்களில் 37,000 தாதியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஐந்து உறுப்பினர்கள் தாதியர் சபைக்கு தெரிவு செய்யப்பட்டனர் மற்றும் ஜே.வி.பி தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை தாதியர் சங்கத்தின் நான்கு உறுப்பினர்கள் அதிகூடிய 66% வாக்கு வீதத்துடன் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், சுயேச்சையாகப் போட்டியிட்ட திருமதி புஷ்பா ரம்யா டி ஜைசா நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்தேர்தலில் ஜே.வி.பி இன் தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை தாதியர் சங்கம் 66% வாக்குகளை பெற்றுள்ளதுடன் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பிரதிநிதித்துவம் செய்யும் பொதுச்சேவை ஐக்கிய தாதியர் சங்கம் 17% வாக்குகளை பெற்றுள்ளதுடன். சமன் ரத்னப்பிரியவின் அரச தாதியர் சங்கம் 16% வாக்குகளை பெற்றுள்ளது.

தாதியர்களுக்கு மேலதிகமாக, ஆயுர்வேதம், தாதியர் கல்வி, சமூக சுகாதாரம், தனியார் தாதியர் பாடசாலைகள், மாகாண பொது சேவை மற்றும் விசேட சேவை செவிலியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு உறுப்பினர்கள் தாதியர் சபைக்கு தெரிவு செய்யப்படுவார்கள். இதன்படி, தெரிவு செய்யப்படவுள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 ஆகும். மேலும், பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 08 அதிகாரிகள் தாதியர் சபைக்கு பரிந்துரைக்கப்படவுள்ளனர்.

2011ஆம் ஆண்டு தாதியர் பேரவைத் தேர்தலின் பின்னர் 5 வருட காலம் 2016ஆம் ஆண்டு நிறைவடைந்த போதிலும் பல்வேறு அரசியல் மற்றும் தொழிற்சங்கங்களின் செல்வாக்கு காரணமாக இந்தத் தேர்தல் 5 வருடங்களாக நடைபெறவில்லை. எவ்வாறாயினும் அகில இலங்கை தாதியர் சங்கம் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் தேர்தலை டிசெம்பர் மாதம் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது. அதன் பிரகாரம் கடந்த 11 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.

இவ்வாறு பல்வேறு அரசியல் அழுதங்களினால் நீண்டகாலமாக செயலிழந்திருந்த தாதியர் பேரவையை மீண்டும் உருவாக்க முடிந்துள்ள அதேவேளை, பொதுசன முன்னணிக்கு விசுவாசமான முருத்தெட்டுவே ஆநனந்த தேரரின் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம். தாதியர் துறையிலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு விசுவாசமான சமன் ரத்னப்பிரியவின் தீர்க்கமான அதிகாரத்தை இழந்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...