Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

தகவல் அறியும் சட்டத்தை செயலிழக்க செய்ய நடவடிக்கை! மைத்திரி வேதனை

T

The Leader Desk

டிசம்பர் 13, 2021 • 6:18 AM

தகவல் அறியும் சட்டத்தை செயலிழக்க செய்ய நடவடிக்கை! மைத்திரி வேதனை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
  • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் நாங்கள் வேதனைக்கு உள்ளாகி இருக்கின்றோம்.
  • உதாரணமாக 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்., சுயாதீன ஆணைக்குழுக்கள், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு, தகவல் அறியும் சட்டம், ஊடக சுதந்திரம் என மிக நீண்ட பட்டியலை என்னால் கூற முடியும்.
எழுத்து அளவு:

கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கூட்டணி அரசாங்கம் ஒன்றை பாதுகாப்பது கூட்டணியை ஏற்படுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களின் பொறுப்பும் கடமையுமாகும். இவர்களுக்கு அதற்கான பொறுப்பு இருக்கின்றது.

அனைவருக்கும் நியாயம் நிறைவேற்றப்பட வேண்டும். எடுக்கும் தீர்மானங்கள் மக்களுக்கு சார்பானதாகவும் ஜனநாயகமாகவும் இருக்க வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் நாங்கள் வேதனைக்கு உள்ளாகி இருக்கின்றோம்.

தகவல் அறியும் சட்டத்தை செயலிழக்க செய்கின்றமையே இதற்கான காரணம். ஆணையாளர் இல்லை. ஆணைக்குழுக்கள் இல்லை.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் எடுக்கப்பட்ட மக்களுக்கு சார்பான பல முடிவுகளை தற்போதைய அரசாங்கம் பின்நோக்கி திருப்பி வருகிறது.

உதாரணமாக 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்., சுயாதீன ஆணைக்குழுக்கள், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு, தகவல் அறியும் சட்டம், ஊடக சுதந்திரம் என மிக நீண்ட பட்டியலை என்னால் கூற முடியும்.

இதில் அடங்கும். தகவல்கள் அறியும் சட்டம் உட்பட மக்களுக்கு சார்பான முடிவுகளை எடுத்து, சட்டங்களை உருவாக்கியதன் காரணமாகவே தனது அரசாங்கத்திற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்புகளும், உதவிகளும் கிடைத்தன.

இதுதான் உண்மையான நிலைமை. நாட்டின் அனைத்து விடயங்களும் மக்களுக்கு சார்பானதாகவும் ஜனநாயகமாகவும் இடம்பெற வேண்டும் என்பதையே மக்களும் எதிர்பார்ப்பார்கள் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...