Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மனித உரிமை தினத்தினை முன்னிட்டு அரச சார்பற்ற அமைப்புகளின் ஏற்பாட்டில் திருகோணமலையில் வாகன பேரணி!

T

The Leader Desk

டிசம்பர் 13, 2021 • 5:57 AM

மனித உரிமை தினத்தினை முன்னிட்டு அரச சார்பற்ற அமைப்புகளின் ஏற்பாட்டில் திருகோணமலையில் வாகன பேரணி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திருகோணமலை சர்வோதயம் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டு கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் வரை சென்று ஐனாதிபதி அவர்களுக்கான மகஜர் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் ஊடாக அனுப்பி வைப்பதற்குரிய நடவடிக்கை இதன்போது முன்னெடுக்கப்பட்டது.
  • கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 350க்கும் மேற்பட்ட மூவின மக்களும் இப்பேரணியில் கலந்து கொண்டு தங்களுக்கு இருக்கக் கூடிய உரிமைசார் பிரச்சினைகளை பதாதைகள் ஊடாகவும், கோசங்கள் ஊடாகவும் வெளிப்படுத்தியிருந்தனர்.
  • இதன் போது மூவின மக்களும் இணைந்து சமாதானம் மற்றும் நல்லிணக்கம் மலர வேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்தி வெள்ளைப் புறா மூலம் அதனை வெளிப்படுத்தியும் இருந்தனர்.
  • மேற்படி பேரணியானது திருகோணமலை சர்வோதயம் நிலாவெளி வீதி ஊடாக 03ம் கட்டை பகுதியை அடைந்து மீண்டும் கண்டி வீதிக்குச் சென்று அபயபுரம் சந்தி ஊடாக இலிங்கநகர், உவர்மலை பிரதேசத்திற்குச் சென்று இறுதியாக கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக நிறைவுற்றது.
எழுத்து அளவு:

திருகோணமலை சர்வோதயம் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டு கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் வரை சென்று ஐனாதிபதி அவர்களுக்கான மகஜர் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் ஊடாக அனுப்பி வைப்பதற்குரிய நடவடிக்கை இதன்போது முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 350க்கும் மேற்பட்ட மூவின மக்களும் இப்பேரணியில் கலந்து கொண்டு தங்களுக்கு இருக்கக் கூடிய உரிமைசார் பிரச்சினைகளை பதாதைகள் ஊடாகவும், கோசங்கள் ஊடாகவும் வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன் போது மூவின மக்களும் இணைந்து சமாதானம் மற்றும் நல்லிணக்கம் மலர வேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்தி வெள்ளைப் புறா மூலம் அதனை வெளிப்படுத்தியும் இருந்தனர்.

மேற்படி பேரணியானது திருகோணமலை சர்வோதயம் நிலாவெளி வீதி ஊடாக 03ம் கட்டை பகுதியை அடைந்து மீண்டும் கண்டி வீதிக்குச் சென்று அபயபுரம் சந்தி ஊடாக இலிங்கநகர், உவர்மலை பிரதேசத்திற்குச் சென்று இறுதியாக கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக நிறைவுற்றது.

ஆளுநர் அலுவலகம் முன்பாக சனாதிபதி அவர்களுக்கு தயாரித்து அனுப்பவிருந்த மகஜர் ஆளுனர் அவர்களின் வேண்டுதல்களுக்கும் கரிசனைக்கும் அமைவாக கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தின் திட்டமிடல் அதிகாரி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

மக்கள் தங்களுக்கான உணவினைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை இல்லை, அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பினை உடன் நிறுத்துதல், தங்களது குடியிருப்பு மற்றும் வாழ்வாதார நிலங்கள் அரசினால் அபகரிக்கப்படுகின்றமை, அடிப்படை உரிமைகளை இலங்கை அரசு உறுதிப்படுத்தல், பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற வன்முறைகளை உடன் நிறுத்துதல், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினையும் நல்லுறவையும் அரசு ஏற்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திய வண்ணம் இப்பேரணி இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மனித உரிமை தினத்தினை முன்னிட்டு அரச சார்பற்ற அமைப்புகளின் ஏற்பாட்டில் திருகோணமலையில் வாகன பேரணி! | Tamil Leader | We Lead the Nation