Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

தும்பிகள் வேகமாக அழிந்து வருவதற்கு காரணம் இதுதான்!

T

The Leader Desk

டிசம்பர் 12, 2021 • 4:45 PM

தும்பிகள் வேகமாக அழிந்து வருவதற்கு காரணம் இதுதான்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச யூனியனால் வெளியிடப்பட்ட அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் சிவப்புப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளது.
  • தற்போது, 16 சதவீத தும்பிகள் அழிவின் விளிம்பில் உள்ளன.
  • சதுப்பு நிலங்கள் "சதுப்பு நிலங்களை, ஆக்கிரமிக்க வேண்டிய தரிசு நிலங்களாக பார்க்கும் பார்வைதான் இதற்கு காரணம்.
  • வியாழக்கிழமையன்று புதுப்பிக்கப்பட்ட சிவப்புப் பட்டியலுடன், அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக 40 ஆயிரத்தை கடந்து உள்ளது.
எழுத்து அளவு:

இது இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச யூனியனால் வெளியிடப்பட்ட அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் சிவப்புப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளது. இந்த வண்ணப் பூச்சி வகைகள் குறித்த முதல் தொகுப்பு மதிப்பீட்டின் மூலம் இதை கண்டறிந்துள்ளனர்.

நகரமயமாக்கலும், நிலையில்லாத விவசாயமுமே சதுப்பு நிலங்கள் அழிந்து போவதற்கான காரணம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

தற்போது, 16 சதவீத தும்பிகள் அழிவின் விளிம்பில் உள்ளன.

சதுப்பு நிலங்கள் நமக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை வழங்குகின்றன என இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச யூனியனின் இயக்குனர் ஜெனரல் டாக்டர். ப்ருனோ ஒப்ர்லே கூறுகிறார்.

"அவை கார்பனை சேமித்து, சுத்தமான நீர், உணவை நமக்கு தருகிறது. வெள்ள பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் உலகம் அறிந்த உயிரினங்களில் பத்தில் ஒன்றுக்கு வாழ்விடத்தை தருகிறது ஆனால், சதுப்பு நிலங்களும் நீர்நிலைகளும் காடுகளை விட மூன்று மடங்கு வேகமாக அழிக்கப்படுகிறது."

1970ம் ஆண்டு முதல் 2015 ம் ஆண்டு வரை, 35 சதவீத சதுப்பு நிலத்தை உலகம் இழந்துவிட்டது என்று மிகச் சமீபத்திய அறிவியல் மதிப்பீடு காட்டுகிறது என்று இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச யூனியனின் சிவப்புப் பட்டியல் பிரிவின் தலைவர் க்ரேக் ஹில்டன் - டெய்லர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"இழப்பின் வீதம் அதிகமாகிக்கொண்டே வருவது போல் தெரிகிறது", என்று கூறுகிறார் அவர்.

சதுப்பு நிலங்கள்

"சதுப்பு நிலங்களை, ஆக்கிரமிக்க வேண்டிய தரிசு நிலங்களாக பார்க்கும் பார்வைதான் இதற்கு காரணம். ஆனால், உண்மையில், அவை மிகவும் முக்கியமானவை,"

"இந்த அழகான பூச்சிகளை காட்டுவதன் மூலமும் , அவை ஆபத்தில் உள்ளன என்று குறிப்பிடுவதன் மூலமும், உலகில் உள்ள நீர்நிலைகளை காக்க நாம் மேலும் அதிகம் செயல்பட வேண்டும் என்ற செய்தியைப் பரப்ப முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்". என்கிறார்.

வியாழக்கிழமையன்று புதுப்பிக்கப்பட்ட சிவப்புப் பட்டியலுடன், அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக 40 ஆயிரத்தை கடந்து உள்ளது.

பூச்சி

இந்தப் புதுப்பிக்கப்பட்ட பட்டியலில், குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு உயிரினம் அரை-நீர்வாழ் பைரினியன் டெஸ்மேன் ( semi-aquatic Pyrenean desman).

இது அன்டோரா, பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உள்ள ஆறுகளில் மட்டுமே காணப்படும் ஒரு பாலூட்டி.

இந்த குழாய் வடிவ மூக்கு கொண்ட உயிரினம் "ஆபத்தில் உள்ள" என்ற பட்டியலில் இருந்து "அழிந்து வரும்" பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் நீண்ட உணர்திறன் கொண்ட மூக்கு மற்றும் பெரிய வலை வடிவம் கொண்ட கால்களுடன், இது உலகில் மீதமுள்ள இரண்டு டெஸ்மேன் வகை இனங்களில் ஒன்றாகும்.

பைரேனியன் டெஸ்மேனின் எண்ணிக்கை 2011ம் ஆண்டு முதல் பாதியாக குறைந்துள்ளது. நீர்மின் நிலையம், அணை மற்றும் நீர்த்தேக்கக் கட்டுமானம் மற்றும் விவசாயத்திற்கான நீர் பிரித்தெடுத்தல் உள்ளிட்ட மனித செயல்களின் தாக்கங்கள் அதற்கு முக்கிய காரணமாக உள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தும்பிகள் வேகமாக அழிந்து வருவதற்கு காரணம் இதுதான்! | Tamil Leader | We Lead the Nation