Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

புலிகளிடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், பணம் போன்றவற்றை அரசாங்கத்தை சார்ந்தவர்கள் அனுபவிக்கின்றார்கள்! சுமந்திரன்

T

The Leader Desk

டிசம்பர் 12, 2021 • 5:24 AM

புலிகளிடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், பணம் போன்றவற்றை அரசாங்கத்தை சார்ந்தவர்கள் அனுபவிக்கின்றார்கள்!  சுமந்திரன் 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
  • அப்போதே நான் அவரிடம் கேட்டிருந்தேன், இத்தனை வருடம் இந்த தங்கத்தை யார் வைத்திருந்தார்கள் என்று.
  • தொடர்ந்தும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பினர் தங்கம், பணம் என சொத்துக்களை வைத்திருந்தார்களா?
எழுத்து அளவு:

வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகள் அமைப்பினர் தங்கம், பணம் என சொத்துக்களை வைத்திருந்தார்களா? அவை இப்போது யாருடைய கைகளிலே இருக்கின்றது போன்ற விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவ்வித ஈடுபாட்டினையும் காட்டவில்லை.

அரசாங்கம், பல சொத்துக்களை, தங்கத்தை, பணத்தை பறிமுதல் செய்ததாக கூறினார்கள். அவற்றைக் கூட சரியான முறையிலேயே அவர்கள் வெளிப்படுத்தவில்லை. அவற்றில் நிறைய தங்கம், பணம் போன்றவை சூறையாடப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது.

வடக்கு மாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksha), இது மக்களுடைய தங்கம், புலிகளிடத்தில் இருந்து நாங்கள் பெற்றவை என கொண்டு சென்று சிலவற்றை விநியோகித்தார்.

அப்போதே நான் அவரிடம் கேட்டிருந்தேன், இத்தனை வருடம் இந்த தங்கத்தை யார் வைத்திருந்தார்கள் என்று. ஏன் அப்பொழுது கொடுக்காமல் இப்பொழுது கொடுக்கின்றீர்கள், இவை மட்டும் தான் நீங்கள் கைப்பற்றினீர்களா? மிகுதி தங்கம் எங்கே என மஹிந்தவிடத்தில் பகிரங்கமாக நான் கேட்டிருந்தேன்.

ஆகவே, அரசாங்கமிடத்திலும் இருக்கின்றது புலிகளிடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், பணம் போன்றவைகள். அராசாங்கம் என்று சொன்னால் அரசாங்கத்தை சார்ந்தவர்கள் பெற்று அனுபவிக்கின்றார்கள் போலத் தெரிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாங்கள் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படியொரு நடவடிக்கை எடுக்கும்படி எங்களுடைய மக்கள் எங்களிடத்தில் கேட்கவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...