Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சட்டமா அதிபரின் உதவியுடன் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' தலைவர் விடுதலை!

T

The Leader Desk

டிசம்பர் 11, 2021 • 6:21 AM

சட்டமா அதிபரின் உதவியுடன் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' தலைவர் விடுதலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி செயலணியில் ஒரே நாடு, ஒரே சட்டம் பொதுபல சேனாவின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக வியாழக்கிழமை (10) வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போது, ​​கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி.
  • ஜனாதிபதி செயலணியின் தலைவருக்கு எதிரான முறைப்பாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு பரிந்துரைத்ததை அடுத்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • ராகல பிக்குவை விடுவிக்க உத்தரவிட்டார்.
எழுத்து அளவு:

ஜனாதிபதி செயலணியில் ஒரே நாடு, ஒரே சட்டம்

பொதுபல சேனாவின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக வியாழக்கிழமை (10) வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போது, ​​கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி. ராகல பிக்குவை விடுவிக்க உத்தரவிட்டார்.

வழக்கு நிலுவையில் உள்ளதால் சந்தேகத்திற்குரிய பிக்குவை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் சஞ்சய ராஜரட்னத்தின் பணிப்புரைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதம நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களிலும் சட்டமா அதிபரினால் இவ்வாறான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.சுமார் 20 ஆண்டுகளாக இருக்கும் வழக்குகளை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டதற்பாக தற்போதைய சட்டமா அதிபர் மீது எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளது.

பொலன்னறுவை சின்னவெலப்பட்டி கிராமத்திலும் வெஹெரகொவெல்ல பிரதேசத்திலும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தியதன் மூலம் முஸ்லிம் சமூகத்தையும், இஸ்லாத்தையும்,அல்லாஹ்வையும் இழிவுபடுத்தியதாக ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவானால் நீதிமன்றில் அண்மையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

ஜனாதிபதி செயலணியின் தலைவருக்கு எதிரான முறைப்பாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு பரிந்துரைத்ததை அடுத்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையை கைவிட்டதையடுத்து, இளைஞர்கள் உட்பட பதினொரு பேர் கடத்தப்பட்டதோடு, காணாமல் போன வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவும் விடுதலை செய்யப்பட்டார்.

அதனையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொடவை நியமித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...