Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இறக்காமம் நீதிமன்ற நியாயாதிக்கம் அம்பாறையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு இடம்மாறுகிறது!

T

The Leader Desk

டிசம்பர் 8, 2021 • 3:30 PM

இறக்காமம் நீதிமன்ற நியாயாதிக்கம் அம்பாறையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு இடம்மாறுகிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நீதியமைச்சின் அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டம், நீதியமைச்சர் அலி சப்ரி தலைமையில் பாராளுமன்றத்தில் இன்று (08) நடைபெற்றது.
  • இருப்பினும், இது அம்பாறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதால், வழக்குகளுக்காக அம்பாறை நீதிமன்றத்துக்கு மக்கள் செல்ல வேண்டிய நிர்ப்பந்தந்தற்கு ஆளாகி உள்ளமை தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
  • இதில், இறக்காமம் பிரதேசம் அம்பாறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் உள்வாங்கப்பட்டிருப்பது தொடர்பாக நீதியமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

நீதியமைச்சின் அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டம், நீதியமைச்சர் அலி சப்ரி தலைமையில் பாராளுமன்றத்தில் இன்று (08) நடைபெற்றது.

இதில், இறக்காமம் பிரதேசம் அம்பாறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் உள்வாங்கப்பட்டிருப்பது தொடர்பாக நீதியமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இறக்காமம் பிரதேசம் தமிழ் மொழி பேசப்படும் பிரதேசமாகும். இருப்பினும், இது அம்பாறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதால், வழக்குகளுக்காக அம்பாறை நீதிமன்றத்துக்கு மக்கள் செல்ல வேண்டிய நிர்ப்பந்தந்தற்கு ஆளாகி உள்ளமை தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மொழி மூல வழக்குகளுக்காக சட்டத்தரணிகளை நாடுதல், முறைப்பாடுகளைக் கையளித்தல், வழக்கு நடவடிக்கைகள் போன்றவற்றில் மொழி தொடர்பான பல இன்னல்களை எதிர்கொள்வதாக தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த நீதியமைச்சர் அலி சப்ரி, இடமாற்று நடவடிக்கைகளை ஆரம்பித்து விரைவாக இப்பிரச்சினையை  தீர்த்துத் தருவதாக வாக்குறுதியளித்துள்ளதாகவும், முஷாரப் எம்.பி மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இறக்காமம் நீதிமன்ற நியாயாதிக்கம் அம்பாறையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு இடம்மாறுகிறது! | Tamil Leader | We Lead the Nation