Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

யாழில் கரையொதுங்கும் சடலங்கள் தொடர்பில் அரசாங்கம் எந்த விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை! சுரேஸ்

T

The Leader Desk

டிசம்பர் 7, 2021 • 3:38 PM

யாழில் கரையொதுங்கும் சடலங்கள் தொடர்பில் அரசாங்கம் எந்த விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை! சுரேஸ்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
  • ஆனால் அவ்வாறு விபத்துக்கள் நடைபெற்றதாக எவ்வித தகவலும் இல்லை.
  • இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண கரையோரங்களில் கடந்த வாரம் ஆறு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
எழுத்து அளவு:

இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண கரையோரங்களில் கடந்த வாரம் ஆறு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

இது தொடர்பில் எந்த விதமான தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை. இதன் காரணமாக காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவராத நிலையில் இந்த சடலங்கள் கரை ஒதுங்குகின்றன.

கடற்கரைகளில் சடலங்கள் ஒதுங்கி வருகின்றன எனில் கடலில் விபத்துக்கள் நடைபெற்று இருக்க வேண்டும். அவ்வாறு இலங்கை மீனவர்கள், அல்லது இந்திய மீனவர்களினது மீன் பிடி படகுகள் விபத்துக்கு உள்ளாகி இருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு விபத்துக்கள் நடைபெற்றதாக எவ்வித தகவலும் இல்லை. இதனால் காணாமல் போனவர்களின் உறவுகள் அச்சத்தில் உள்ளனர். எனினும் அரசாங்கம் எந்த விசாரணைகளையும் முன்னெ டுக்கவில்லை.

இந்நிலையில் மக்களுக்கு விபரங்களை விரைந்து கொடுக்க வேண்டும். பொலிஸ், கடற்படை மீது அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே பொலிஸார் மற்றும் கடற்படை ஆகியவை இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை தீவிரப்படுத்தி, அதன் உண்மை தன்மைகளை விபரங்களை விரைவாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரமேசந்திரன் கோரினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

யாழில் கரையொதுங்கும் சடலங்கள் தொடர்பில் அரசாங்கம் எந்த விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை! சுரேஸ் | Tamil Leader | We Lead the Nation