Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மாணவர்களின் பாடசாலைகளுக்கு பிள்ளையானின் குண்டர்கள் பூட்டு!

T

The Leader Desk

டிசம்பர் 7, 2021 • 4:43 AM

மாணவர்களின் பாடசாலைகளுக்கு பிள்ளையானின் குண்டர்கள் பூட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சிவானந்தா வித்தியாலய மாணவர்களின் கல்விக்கு இடையூறு விளைவித்து, காலை பாடசாலைக்கு வந்த மாணவர்களை பாடசாலைக்குள் நுழைய விடாமல் 25பேர் அடங்கிய பிள்ளையானின் குண்டர்கள் பாடசாலை வாயிலை மூடியதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
  • " இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் முறைப்பாடு செய்துள்ளது.
  • கொவிட் 19 தொற்றினால் பாடசாலைகள் நீண்டகாலமாக மூடப்பட்டிருந்தமையால் பாடசாலை மாணவர்களின் கல்வியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்குக் கிடைக்கும் குறைந்த கால அவகாசத்தையும் குண்டர்கள் பறிப்பது பாரிய பிரச்சினை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எழுத்து அளவு:

சிவானந்தா வித்தியாலய மாணவர்களின் கல்விக்கு இடையூறு விளைவித்து, காலை பாடசாலைக்கு வந்த மாணவர்களை பாடசாலைக்குள் நுழைய விடாமல்  25பேர் அடங்கிய பிள்ளையானின் குண்டர்கள் பாடசாலை வாயிலை மூடியதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வாயிலை மறிக்காமல் நடைபாதையில் போராட்டம் நடத்தலாம் என்று கூறிய ஆசிரியர்களையும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க பாடசாலைக்குள் நுழைய முடியாதவாறு குண்டர்கள் தடுத்ததை கண்டதாகவும், அங்கு சென்ற உள்ளூர் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் காரணமாக நேற்று பாடசாலையில் ஆசிரியர்கள் எவரும் கடமைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் ஆசிரியர்கள் கந்தன்குடி பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்றதாகவும் சிரேஷ்ட ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பி உதயரூபன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கந்தன்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

“பொலிசார் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பாடசாலை நுழைவாயில் கதவை மூடி மாணவர்களை பாடசாலைக்குள் நுழையவிடாமல் தடுத்துள்ள இந்த பலாத்காரமான கலவரச் செயலுக்கு சிவானந்தா வித்தியாலய அதிபரும் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளரும் மௌனம் காப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். "

p 2

இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் முறைப்பாடு செய்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 தொற்றினால் பாடசாலைகள் நீண்டகாலமாக மூடப்பட்டிருந்தமையால் பாடசாலை மாணவர்களின் கல்வியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்குக் கிடைக்கும் குறைந்த கால அவகாசத்தையும் குண்டர்கள் பறிப்பது பாரிய பிரச்சினை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாடசாலை மீண்டும் ஆரம்பித்த பிறகு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பி. உதயரூபன் தொடர்ந்தும் இவ்வாறான பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாகியுள்ளதுடன், அந்த அச்சுறுத்தல்களின் தொடர்ச்சியே இந்த சம்பவமும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. பி உதயரூபன் தனது கருத்துச் சுதந்திர உரிமையில் இவ்வாறு தலையிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறார்.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மாணவர்களின் பாடசாலைகளுக்கு பிள்ளையானின் குண்டர்கள் பூட்டு! | Tamil Leader | We Lead the Nation