Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஒரு நாடு - பல சட்டங்கள் நிலைநாட்டப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.!

T

The Leader Desk

டிசம்பர் 6, 2021 • 5:38 PM

ஒரு நாடு - பல சட்டங்கள் நிலைநாட்டப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இஸ்லாமிய நாடுகள் தொடர்பான உச்சி மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வழங்கிய இராப்போசன விருந்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  • கடந்த 30ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இரவு விருந்தில் அவர் பேசுகையில், “சமீப காலமாக பல்வேறு மதங்களின் பெயரால் தீவிரவாதக் குழுக்கள் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட நவீன தகவல் தொழில்நுட்பத்தை துஷ்பிரயோகம் செய்து உருவாக்க முயற்சித்து வருகின்றன.
  • அதனை மீறாமல் இலங்கை செயற்படும்” என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இஸ்லாமிய நாடுகள் தொடர்பான உச்சி மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வழங்கிய இராப்போசன விருந்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

"எல்லா மதங்கள், இனங்கள் அல்லது தேசியங்களைச் சேர்ந்த தனிநபர்கள் தங்கள் மதம், கலாசாரம் மற்றும் மொழியை சுதந்திரமாக கடைப்பிடித்து, தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை அனுபவிக்கக்கூடிய ஒரு சமூகமாக இலங்கை அதன் வளமான ஜனநாயக பாரம்பரியத்தை தொடர்ந்து நிலைநிறுத்த செய்யும்." இதுவும் முஸ்லிம் சட்டம், கண்டிய சட்டம் மற்றும் தமிழ் சமூகத்திற்கென தனிப்பட்ட சட்டம் மற்றும் மாறுபட்ட சட்ட பாரம்பரியத்தில் பிரதிபலிக்கிறது. அதனை மீறாமல் இலங்கை செயற்படும்” என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 30ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இரவு விருந்தில் அவர் பேசுகையில், “சமீப காலமாக பல்வேறு மதங்களின் பெயரால் தீவிரவாதக் குழுக்கள் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட நவீன தகவல் தொழில்நுட்பத்தை துஷ்பிரயோகம் செய்து உருவாக்க முயற்சித்து வருகின்றன. சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிப்பதன் மூலம் இலங்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக”  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், மத மற்றும் கலாசார பன்முகத்தன்மை இலங்கைக்கு பலமாக இருப்பதாகவும், தீவிரவாத சக்திகளால் பரப்பப்படும் பொய்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அண்மைக்காலமாக எடுக்கப்பட்ட பிற பிற்போக்கான நடவடிக்கைகள் அகற்றப்படுவதில் நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஓமன், பாலஸ்தீனம், சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான், கத்தார், துருக்கி ஆகிய நாடுகளுக்கான தூதுவர்கள், மலேசியா, மாலைதீவு, பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர்கள், பாகிஸ்தான், லிபியா, எகிப்து, குவைத், ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்களும் கலந்து கொண்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

rtert676

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...