Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

வெளிநாட்டு பயண கடவுச்சீட்டு அச்சிடும் பணி அரசு அச்சகத்திற்கு!

T

The Leader Desk

டிசம்பர் 6, 2021 • 5:27 AM

வெளிநாட்டு பயண கடவுச்சீட்டு அச்சிடும் பணி அரசு அச்சகத்திற்கு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சு மற்றும் அரசாங்க அச்சகத்தின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
  • வெளிநாட்டு நிறுவனம் சுமார் ஒரு மில்லியன் கடவுச்சீட்டுகளை அச்சிடுவதற்கு சுமார் 1 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியிருந்தது மற்றும் ஒரு மில்லியன் கடவுச்சீட்டுகள் ஒன்றரை வருடத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.
  • தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் கடவுச்சீட்டை அரசாங்க அச்சகத்தினால் அச்சிட முடியும் எனவும், அவ்வாறான வசதிகளை வழங்குவதற்கு சுமார் 700 மில்லியன் ரூபா செலவாகும் எனவும் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சு அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • பக்கங்களைக் கொண்ட கடவுச்சீட்டை அரசாங்க அச்சகத்தில் 350 முதல் 450 ரூபாவிற்கு அச்சிட முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சு மற்றும் அரசாங்க அச்சகத்தின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

தற்போது இலங்கை கடவுச்சீட்டுகள் இந்தோனேசிய நிறுவனத்தினால் அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன.

வெளிநாட்டு நிறுவனம் சுமார் ஒரு மில்லியன் கடவுச்சீட்டுகளை அச்சிடுவதற்கு சுமார் 1 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியிருந்தது மற்றும் ஒரு மில்லியன் கடவுச்சீட்டுகள் ஒன்றரை வருடத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.

தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் கடவுச்சீட்டை அரசாங்க அச்சகத்தினால் அச்சிட முடியும் எனவும், அவ்வாறான வசதிகளை வழங்குவதற்கு சுமார் 700 மில்லியன் ரூபா செலவாகும் எனவும் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சு அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

64 பக்கங்களைக் கொண்ட கடவுச்சீட்டை அரசாங்க அச்சகத்தில் 350 முதல் 450 ரூபாவிற்கு அச்சிட முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

டொலர் கையிருப்பு நெருக்கடிக்கு தீர்வு!

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் கடந்த வருடம் (2020) செப்டெம்பர் மாதம் அமைச்சரவையில் வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளை அச்சிடுவதை அரசாங்க அச்சகத்திடம் ஒப்படைப்பதற்கான யோசனையொன்றை முன்வைத்திருந்தார்.

கடவுச்சீட்டு அச்சிடுவது வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன், உடன்படிக்கையின் பிரகாரம் வெளிநாட்டு நிறுவனம் இன்னும் இரண்டரை வருடங்களுக்கு கடவுச்சீட்டை அச்சிடுவதாகக் கூறி பிரேரணை புறக்கணிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இலங்கை டொலர் கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்டு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் இவ்வேளையில் கடவுச்சீட்டுகளை அச்சிட்டு அரச அச்சகத்திற்கு வழங்குவதன் மூலம் வருடத்திற்கு பல பில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அரசாங்க அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார். .

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வெளிநாட்டு பயண கடவுச்சீட்டு அச்சிடும் பணி அரசு அச்சகத்திற்கு! | Tamil Leader | We Lead the Nation