Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் நாட்டிற்கு!

T

The Leader Desk

டிசம்பர் 5, 2021 • 3:49 PM

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் நாட்டிற்கு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் அன்னாரின் சடலம் கொண்டுவரப்படவுள்ளது.
  • அத்துடன், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
  • பாகிஸ்தானில் 400 இற்கும் அதிகமான இலங்கையர்கள் வசித்து வருவதாகவும் அவர் கூறினார்.
எழுத்து அளவு:

ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் அன்னாரின் சடலம் கொண்டுவரப்படவுள்ளது.

அன்னாரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டுவருவது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான செலவை ஏற்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில், பாகிஸ்தான் அரசாங்கத்தினால் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, தற்போது பாகிஸ்தானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகர் மேலும் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் 400 இற்கும் அதிகமான இலங்கையர்கள் வசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் நாட்டிற்கு! | Tamil Leader | We Lead the Nation