Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளப்போவதில்லை!

T

The Leader Desk

டிசம்பர் 4, 2021 • 5:49 PM

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளப்போவதில்லை! 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை, கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு அருகில் வைத்து, இன்று (04) பகல் தாக்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • மனுஷ நாணயக்கார, பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்தே இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • அப்போது அங்கிருந்த அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, தாக்குதலை முறியடித்ததாக எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
எழுத்து அளவு:

ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை, கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு அருகில் வைத்து, இன்று (04) பகல் தாக்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது அங்கிருந்த அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, தாக்குதலை முறியடித்ததாக எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

மனுஷ நாணயக்கார, பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்தே இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது படைக்கலசேவிதர் மற்றும் பாராளுமன்ற பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில், சபாநாயகரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் இதனையடுத்தே வெளிநடப்புச் செய்ய எம்.பிக்கள் தீர்மானித்துள்ளதாகவும்  கிரியெல்ல தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...