Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

'பாதுகாப்பு காரணங்களுக்காக' வடக்கில் வலுசக்தி திட்டங்களை கைவிடுகிறது சீனா!

T

The Leader Desk

டிசம்பர் 4, 2021 • 5:12 PM

'பாதுகாப்பு காரணங்களுக்காக' வடக்கில் வலுசக்தி திட்டங்களை  கைவிடுகிறது  சீனா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனவரி 18 ஆம் திகதி யாழ்ப்பாணக் குடாநாட்டின் நாகதீபம், நெடுந்தீவு மற்றும் அனலலைத்தீவு ஆகிய தீவுகளில் கலப்பு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைப்பை நிறுவுவதற்கு சீன நிறுவனம் ஒன்றுக்கு ஸ்ரீலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
  • சீனா குறிப்பிட்டுள்ள மூன்றாவது தரப்பாக இந்தியா இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
  • பெப்ரவரியில், தமிழ்நாட்டின் கடற்கரையிலிருந்து சுமார் 50 கிலோ மீற்றர் தொலைவில் கட்டப்படும் சீனத் திட்டத்திற்குப் பதிலாக, இலங்கைக்கு 12 மில்லியன் டொலர் உதவியுடன் இந்தியா தனது சொந்த வலுசக்தித் திட்டத்தை அமைக்க முன்மொழிந்ததாக இந்தியா தெரிவித்துள்ளது.
  • நவம்பர் 29ஆம் திகதி மாலைத்தீவு தலைநகருக்கு தெற்கே உள்ள அட்டோலில் உள்ள 12 தீவுகளிலும் வலுசக்தி திட்டங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் சீன நிறுவனத்துடன் கையெழுத்தாகியுள்ளதாக, மாலைத்தீவின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அமினாத் ஷோனா அறிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

ஜனவரி 18 ஆம் திகதி யாழ்ப்பாணக் குடாநாட்டின் நாகதீபம், நெடுந்தீவு மற்றும் அனலலைத்தீவு ஆகிய தீவுகளில் கலப்பு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைப்பை நிறுவுவதற்கு சீன நிறுவனம் ஒன்றுக்கு ஸ்ரீலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

சைனோ சோர்ஸ் ஹைப்ரிட் டெக்னாலஜிக்கு (Sino Source Hybrid Technology) வழங்கப்பட்ட இந்த திட்டம் பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டு மாலலைத்தீவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

மாலைத்தீவில் சூரிய சக்தி மின் நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையின் மூன்று  தீவுகளில் கலப்பு மின் அமைப்பின் கட்டுமானத்தை இடைநிறுத்த வேண்டியேற்பட்டுள்ளதாக  கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

 சீனா குறிப்பிட்டுள்ள மூன்றாவது தரப்பாக இந்தியா இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெப்ரவரியில், தமிழ்நாட்டின் கடற்கரையிலிருந்து சுமார் 50 கிலோ மீற்றர் தொலைவில் கட்டப்படும் சீனத் திட்டத்திற்குப் பதிலாக, இலங்கைக்கு 12 மில்லியன் டொலர் உதவியுடன் இந்தியா தனது சொந்த  வலுசக்தித் திட்டத்தை அமைக்க முன்மொழிந்ததாக இந்தியா தெரிவித்துள்ளது.

நவம்பர் 29ஆம் திகதி மாலைத்தீவு தலைநகருக்கு தெற்கே உள்ள அட்டோலில் உள்ள 12 தீவுகளிலும் வலுசக்தி திட்டங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் சீன நிறுவனத்துடன் கையெழுத்தாகியுள்ளதாக, மாலைத்தீவின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அமினாத் ஷோனா அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் எவ்வித கருத்தையும்  வெளியிடவில்லை.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'பாதுகாப்பு காரணங்களுக்காக' வடக்கில் வலுசக்தி திட்டங்களை கைவிடுகிறது சீனா! | Tamil Leader | We Lead the Nation