Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

தொற்றுநோயின் ஐந்தாவது அலை: பசில் மீது ராஜித குற்றம் சாட்டுகிறார்!

T

The Leader Desk

டிசம்பர் 2, 2021 • 8:18 AM

தொற்றுநோயின் ஐந்தாவது அலை: பசில் மீது ராஜித குற்றம் சாட்டுகிறார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சுகாதார அமைச்சின் செலவினங்கள் தொடர்பான குழு விவாதத்தில் கலந்து கொண்ட, முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன நேற்று பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
  • உலக சுகாதார நிறுவனம் (WHO) 32 பிறழ்வுகளை ஏற்படுத்தும் உலகளாவிய தொற்றுநோயான கொவிட் வைரஸின் ஐந்தாவது திரிபு ஓமிக்ரானை அடையாளம் கண்டுள்ளது.
  • இவ்வாறான ஆபத்தை எதிர்நோக்கியுள்ள போதிலும் ராஜபக்ச அரசாங்கம் கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துக்கான ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 70 பில்லியனுக்கும் அதிகமான தொகையை குறைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
  • கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 301 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை அது 234 பில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

சுகாதார அமைச்சின் செலவினங்கள் தொடர்பான குழு விவாதத்தில் கலந்து கொண்ட, முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன நேற்று பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் (WHO) 32 பிறழ்வுகளை ஏற்படுத்தும் உலகளாவிய தொற்றுநோயான கொவிட் வைரஸின் ஐந்தாவது திரிபு ஓமிக்ரானை அடையாளம் கண்டுள்ளது.

இவ்வாறான ஆபத்தை எதிர்நோக்கியுள்ள போதிலும் ராஜபக்ச அரசாங்கம் கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துக்கான ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 70 பில்லியனுக்கும் அதிகமான தொகையை குறைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 301 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை அது 234 பில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொவிட் இறப்பு எண்ணிக்கை 14,305 ஆக உள்ளது, மேலும் 500,000 க்கும் மேற்பட்ட கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

"தடுப்பூசியின் தாமதம் மற்றும் விஞ்ஞான முறையற்ற தம்மிக பாணி, சுதர்ஷினி பாணி, ரித்திகல பாணி போன்ற அறிவியலற்ற முறைகளை கையில் எடுத்ததால், தடுப்பூசியின் அடிப்படையில் உலகில் 39 வது இடத்திலும்,கொவிட் 19 பரவலில் மோசமான நாடுகளில் 58 வது இடத்திலும் நாம் உள்ளோம் மற்றும் முட்டிகளையும் ஆற்றில் விட்டடோம்,'' என முன்னாள் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

அதிகப்படியான மரணம்

அவர் கூறுகையில் தெற்காசிய நாடுகளில் கொவிட் இறப்பு எண்ணிக்கையை ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கான கணக்கெடுப்பிற்கு அதிக எண்ணிக்கையிலான கொவிட் மரணங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக கூறினார்.

ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு பாகிஸ்தானில் 126, பங்களாதேஷில் 160, ஆப்கானிஸ்தானில் 182, இந்தியாவில் 334, மாலத்தீவில் 442, இலங்கையில் 664 என கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

மேலும், அரசாங்க வைத்தியசாலைகளில் தற்போது பாம்பு கடி எதிர்ப்பு மருந்துகள் 5, எய்ட்ஸ் நோயாளர்களுக்கான ஐந்து மருந்துகளும், இருதய நோயாளர்களுக்கான ஒரு மருந்தும், நரம்பியல் நோய்களுக்கான மூன்று மருந்துகளும், புற்று நோயாளர்களுக்கான ஐந்து மருந்துகளும் மற்றும் சிறுநீரக மருந்துகளுக்கும் அரசாங்க வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு உள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் வெட்டு விழுந்துள்ளதால், எதிர்காலத்தில் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்,” என அவர் எச்சரித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...