Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அர்ஜூன ரணதுங்க அடுத்ததாக எந்தக் கட்சிக்கு செல்வார்!

T

The Leader Desk

நவம்பர் 30, 2021 • 5:05 PM

அர்ஜூன ரணதுங்க அடுத்ததாக எந்தக் கட்சிக்கு செல்வார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ரணதுங்க முதலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
  • இதனையடுத்து 2010ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.
  • இதன் பின்னர் 2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு சென்ற அர்ஜூன ரணதுங்க அடுத்து இணைய போகும் இரண்டு அரசியல் நீரோட்டங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • இதனையடுத்து 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜனநாயக தேசிய முன்னணியின் கீழ் போட்டியிட்ட களுத்துறை மாவட்டத்தின் அமைப்பாளராக நியமிப்பது பற்றி சஜித்தின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எழுத்து அளவு:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ரணதுங்க முதலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து 2010ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

இதன் பின்னர் 2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு சென்ற அர்ஜூன ரணதுங்க அடுத்து இணைய போகும் இரண்டு அரசியல் நீரோட்டங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தி, அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அர்ஜூன ரணதுங்கவை ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டம் அல்லது கொழும்பு மாவட்டத்தில் தொகுதி அமைப்பாளராக நியமிப்பது குறித்து சஜித் பிரேமதாச கவனம் செலுத்தியிருந்தார்.

எனினும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜனநாயக தேசிய முன்னணியின் கீழ் போட்டியிட்ட களுத்துறை மாவட்டத்தின் அமைப்பாளராக நியமிப்பது பற்றி சஜித்தின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான கூட்டணியில் இணைவது குறித்தும் ரணதுங்க கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது.

அந்த கூட்டணியின் ஊடாக அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் நோக்கில் அவர், அதில் இணைவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக பேசப்படுகிறது.

அர்ஜூன ரணதுங்கவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் எதிர்பார்ப்பு உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தன்னை பொது வேட்பாளராக நிறுத்தும் அவசியம் காலஞ் சென்ற மாதுளுவாவே சோபித தேரருக்கு இருந்தது என ரணதுங்க இதற்கு முன்னர் கூறியிருந்தார்.

இதனடிப்படையில் ரணதுங்க, ஐக்கிய மக்கள் சக்தி அல்லது மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான அரசியல் கூட்டணியில் இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளார்.

ரணதுங்க குடும்ப சகோதரர்களில் அர்ஜூன ரணதுங்கவுடன் நெருக்கமாக இருந்து வரும் ருவன் ரணதுங்க, ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியில இணைந்து விட்டார். அவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும், அர்ஜூன ரணதுங்கவின் சகோதரர்களில் ஒருவர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அர்ஜூன ரணதுங்க அடுத்ததாக எந்தக் கட்சிக்கு செல்வார்! | Tamil Leader | We Lead the Nation