Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காணிகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை!

T

The Leader Desk

நவம்பர் 29, 2021 • 4:49 PM

மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காணிகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆம் ஆண்டு, தமது சொந்த காணிகளை விட்டு வெளியேறி, இந்தியாவிலும் அகதி முகாம்களிலும் வாழ்ந்து வந்ததாகவும் தற்போது தங்களுடைய காணிகளுக்குள் செல்லவிடாமல் தடுப்பதால், தமக்குரிய காணிகளை அரச அதிகாரிகள் பெற்றுத்தர வேண்டுமென அவர்கள் கோரினர்.
  • யுத்த காலத்தின் போது 83 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் காணிகள் கைவிடப்பட்ட நிலையில், தற்போது அக்காணிகளில் வேறு பிரதேசங்களிலிருந்து வந்தவர்களால் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
  • தமக்கு உரிய ஆதாரங்கள் காணப்படுகின்ற போதிலும், மொரவெவ பிரதேச செயலக அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்தவில்லையெனவும் தமிழ் மக்களுக்குரிய காணிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குற்றஞ்சாட்டினார்.
  • குறித்த காணிகள் தொடர்பில், திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்ஷன பாண்டி கோரள விசாரணைகளை மேற்கொண்டு, எதிர்வரும் டிசெம்பர் 30ஆம் திகதிக்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

1983ஆம் ஆண்டு, தமது சொந்த காணிகளை விட்டு வெளியேறி, இந்தியாவிலும் அகதி முகாம்களிலும் வாழ்ந்து வந்ததாகவும்  தற்போது தங்களுடைய காணிகளுக்குள் செல்லவிடாமல் தடுப்பதால், தமக்குரிய காணிகளை அரச அதிகாரிகள் பெற்றுத்தர வேண்டுமென அவர்கள் கோரினர்.

யுத்த காலத்தின் போது 83 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் காணிகள் கைவிடப்பட்ட நிலையில்,  தற்போது அக்காணிகளில் வேறு பிரதேசங்களிலிருந்து வந்தவர்களால் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

தமக்கு உரிய ஆதாரங்கள் காணப்படுகின்ற போதிலும், மொரவெவ பிரதேச செயலக அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்தவில்லையெனவும் தமிழ் மக்களுக்குரிய காணிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குற்றஞ்சாட்டினார்.

குறித்த காணிகள் தொடர்பில், திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்ஷன பாண்டி கோரள விசாரணைகளை மேற்கொண்டு, எதிர்வரும் டிசெம்பர் 30ஆம் திகதிக்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...