Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மலையக அரசியல் அரங்கமானது சமூக அரசியலை முன்னெடுப்பதற்கான அமைப்பு என்பதால் எவரும் இணையலாம்! திலகராஜ்

T

The Leader Desk

நவம்பர் 28, 2021 • 11:56 AM

மலையக அரசியல் அரங்கமானது சமூக அரசியலை முன்னெடுப்பதற்கான அமைப்பு என்பதால் எவரும் இணையலாம்! திலகராஜ்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறித்த அமைப்பு கடந்த 30 ஆம் திகதி உதயமானாலும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் தலவாக்கலையில் இன்று (28)) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது தெளிவுப்படுத்தப்பட்டது.
  • மலையகம் சமூகம் நூற்றாண்டுகால அரசியல் சமூகம், அதற்கு அரசியல் அடையாளம் இருக்கின்றது.
  • இதன்போது “அறிவார்ந்த அரசியல் உரையாடலை மலையக அரசியல் தளத்தில் உருவாக்குதல், அதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுதல், மாவட்ட எல்லைகளைக் கடந்த மலையக அரசியலை முன்னெடுத்தல் ஆகியன அமைப்பின் பிரதான நோக்கமாகும்." என்று திலகராஜ் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

குறித்த அமைப்பு கடந்த 30 ஆம் திகதி உதயமானாலும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் தலவாக்கலையில் இன்று (28)) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது தெளிவுப்படுத்தப்பட்டது.

இதன்போது “அறிவார்ந்த அரசியல் உரையாடலை மலையக அரசியல் தளத்தில் உருவாக்குதல், அதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுதல், மாவட்ட எல்லைகளைக் கடந்த மலையக அரசியலை முன்னெடுத்தல் ஆகியன அமைப்பின் பிரதான நோக்கமாகும்." என்று திலகராஜ் தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பு மற்றும் தேர்தல் மறுசீரமைப்பு என்பன தயாரிக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, சமூகத்தில் அறிவார்ந்த கருத்தாடல்களை உருவாக்கி, சமூகத்தின் தேவை அறிந்து, அவர்களின் தேவைக்கேற்ப தேவையான யோசனைகளை இனிவரும் தேசிய மட்ட விடயங்களின்போது முன்வைப்போம்.

ஏனெனில் மக்களின் நிலைப்பாடுதான் பிரதிபலிக்க வேண்டும். எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். மலையகம் சமூகம் நூற்றாண்டுகால அரசியல் சமூகம், அதற்கு அரசியல் அடையாளம் இருக்கின்றது.

கூலி சமூகம் மட்டும் அல்ல. செனட் சபையில்கூட பிரதிநிதித்துவம் இருந்திருக்கின்றது. எனவேதான் அமைப்பின் சின்னமாக நடேசய்யர் மற்றும் அவரின் பாரியாரின் படங்களை பயன்படுத்தியுள்ளோம்.

மலையக அரசியல் அரங்கமானது, அரசியல் கட்சியாகவோ அல்லது தொழிற்சங்கமாகவோ பதிவுசெய்யப்படவில்லை. சமூக அரசியலை முன்னெடுப்பதற்கான அமைப்பு என்பதால் அதில் எவரும் இணையலாம். எனவும் இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.

மலையக அரசியல் அரங்கின் பிரதான அமைப்பாளர் ராமன் திருச்செந்தூரன், செயற்குழுச் செயலாளர் நாகரட்ணம் கிருஷ்ணகுமார் ஆகியோரும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...