Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

கிண்ணியாவிலும்,முல்லைத்தீவிலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

T

The Leader Desk

நவம்பர் 28, 2021 • 11:33 AM

கிண்ணியாவிலும்,முல்லைத்தீவிலும்  ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபி முன்றலில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமானது பின்னர் ஊர்வலமாக ஆரம்பித்து மணிக்கோபுரத்தின் ஊடக காந்திப் பூங்கா முன்நுழைவு வாயில் வழியாக காந்தி சிலையருகே சென்று அங்கும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

நேற்றைய தினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது இராணுவத்தினாரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்தும், அண்மையில் திருகோணமலை கிண்ணியாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் அதற்கான நீதி கோரியும் மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், மதகுருமார்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கரணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மட்டக்களப்பு மாநகரசபைப் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன், கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜன் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் மேற்கொள்ளப்படுகின்ற அடக்குமுறைகளை நிறுத்து, தாக்குதலை மேற்கொண்டவர்களை உடனடியாகக் கைது செய், ஊடகவியாளர்களைத் தாக்காதே, ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்காதே போன்ற கோசங்களை எழுப்பியவாறும், ஊடகவியலாளர்களைச் சுதந்திரமாகச் செயற்பட அனுமதி, இராணுவ அடக்குமுறை ஒழிக, அரசே ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்து, சிறைப்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்களை உடன் விடுதலை செய், ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய இராணுவத்தினரைக் கைது செய் போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபி முன்றலில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமானது பின்னர் ஊர்வலமாக ஆரம்பித்து மணிக்கோபுரத்தின் ஊடக காந்திப் பூங்கா முன்நுழைவு வாயில் வழியாக காந்தி சிலையருகே சென்று அங்கும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கிண்ணியாவிலும்,முல்லைத்தீவிலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! | Tamil Leader | We Lead the Nation