Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

உக்ரைனில் அடுத்த வாரம் ஆட்சி கவிழ்ப்பு சதியா!

T

The Leader Desk

நவம்பர் 28, 2021 • 4:17 AM

உக்ரைனில் அடுத்த வாரம் ஆட்சி கவிழ்ப்பு சதியா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரஷியா-உக்ரைன் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.
  • கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷியா தன்னுடன் இணைத்து கொண்டது முதல் இருநாடுகள் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்தது.
  • இந்த நிலையில் உக்ரைனில் அடுத்த வாரம் ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதில் ரஷியர்களின் பங்கு இருப்பதாகவும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
  • இதுகுறித்து அவர் கூறுகையில் “டிசம்பர் 1 ம்திகதி நம் நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கும் என்று எனக்கு தகவல் கிடைத்தது.
எழுத்து அளவு:

ரஷியா-உக்ரைன் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷியா தன்னுடன் இணைத்து கொண்டது முதல் இருநாடுகள் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்தது. இதை தொடர்ந்து, உக்ரைனின் கிழக்கு பகுதிகளை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமித்தனர்.

இவர்கள் ரஷிய ராணுவத்தின் உதவியோடு அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் ரஷியா இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறது.

இந்த நிலையில் உக்ரைனில் அடுத்த வாரம் ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதில் ரஷியர்களின் பங்கு இருப்பதாகவும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “டிசம்பர் 1 ம்திகதி நம் நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கும் என்று எனக்கு தகவல் கிடைத்தது. அரசின் எதிர்ப்பாளராக கருதப்படும் தொழில் அதிபர் ரினாட் அக்மெடோவ், உக்ரைனிய அரசுக்கு எதிரான போருக்கு இழுக்கப்படுகிறார். இது தொடர்பாக அவருக்கும் ரஷியா பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்த உரையாடலின் ஓடியோ என்னிடம் உள்ளது” என கூறினார்.

ஆனால் இந்த குற்றசாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள தொழில் அதிபர் ரினாட் அக்மெடோவ், அதிபர் ஜெலன்ஸ்கி பொய் பரப்புரை செய்வதாக சாடியுள்ளார். அதே போல் ரஷியாவும் இந்த குற்றசாட்டை மறுத்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...