Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

லசந்த உயிரிழக்கப்போவதை காவல்துறைமா அதிபர் முன்னரே அறிந்திருந்தார்!

T

The Leader Desk

நவம்பர் 26, 2021 • 6:23 PM

லசந்த உயிரிழக்கப்போவதை காவல்துறைமா அதிபர் முன்னரே அறிந்திருந்தார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காவற்துறை காவலில் உயிரிழந்த லுனுவிலகே லசந்தவின் மரணம் சட்டவிரோதமான படுகொலை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
  • ஏனென்றால் அவர் மனிதாபிமான அமைப்புகளின் கூட்டமைப்பின் (CHA) தலைவராக செயற்படுகின்றார்.
  • மனித உரிமைகள் நிலைமைக் காரணமாக ஸ்ரீலங்கா காவல்துறைக்கு பயிற்சியைத் தொடர வேண்டாம் எனத் தீர்மானித்துள்ளதாக, ஸ்காட்லாந்தின் காவல்துறைத் தலைவர் இயன் லிவிங்ஸ்டன் நவம்பர் 24ஆம் திகதி உயர் காவல்துறை அதிகாரிகளின் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
காவற்துறை காவலில் உயிரிழந்த லுனுவிலகே லசந்தவின் மரணம் சட்டவிரோதமான படுகொலை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய ஒன்றரை தசாப்தங்களாக ஸ்ரீலங்கா காவல்துறைக்கு வழங்கிய பயிற்சியை, இனி வழங்கப்போவதில்லை என ஸ்கொட்லாந்து காவல்துறை அறிவித்து இரண்டு நாட்களுக்குள், லுனுவிலகே லசந்த அல்லது டிங்கரிங் லசந்த இன்று காலை காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த படுகொலை முயற்சி தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் காவல்துறை மா அதிபருக்கு அறிவித்திருந்த நிலையிலும் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

"இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உடனடியாக இது குறித்து காவல்துறைமா  அதிபருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் அறிவித்தார்."

மேலும், இது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகள் ஆணையாளர், ஆணைக்குழுவின் முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு அறிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கும் இதுத் தொடர்பில் அறிவித்துள்ளார்.

ஏனென்றால் அவர்  மனிதாபிமான அமைப்புகளின் கூட்டமைப்பின் (CHA) தலைவராக செயற்படுகின்றார்.

இன்றைய தினம் களுத்துறை, தியகம பகுதியில், சந்தேகநபருக்கு சொந்தமான கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றை தேடிச் சென்றபோது சந்தேகநபர் குறித்த கைத்துப்பாக்கியால் காவல்துறை அதிகாரிகளை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில், காவல்துறையின் பதில் தாக்குதலில் குறித்த சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  இச்சம்பவத்தில் இரு காவல்துறையினர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவற்துறை காவலில் உள்ள சந்தேகநபர் ஒருவருக்கு பாதுகாப்பு வழங்க தவறியமை குறித்து விளக்கமளிக்குமாறு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ராஜீவ் அமரசூரியவின் கையொப்பத்துடன் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில் காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் நிலைமைக் காரணமாக ஸ்ரீலங்கா காவல்துறைக்கு பயிற்சியைத் தொடர வேண்டாம் எனத் தீர்மானித்துள்ளதாக, ஸ்காட்லாந்தின் காவல்துறைத் தலைவர் இயன் லிவிங்ஸ்டன் நவம்பர் 24ஆம் திகதி உயர் காவல்துறை அதிகாரிகளின் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக அதிகரித்துள்ள கைதுகள், தடுப்புக்காவல் மரணங்கள், சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையான தடுப்புக்காவல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஸ்ரீலங்கா காவல்துறைக்கு ஸ்காட்லாந்து காவல்துறையினால் வழங்கப்படும் பயிற்சியை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...