Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

எங்கள் போராட்டத்தின் வலி என்னவென்று தெரியாதவர்கள் பேசக்கூடாது! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

T

The Leader Desk

நவம்பர் 26, 2021 • 5:35 AM

எங்கள் போராட்டத்தின் வலி என்னவென்று தெரியாதவர்கள் பேசக்கூடாது! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இப்படியான போராட்டங்களின் போது அரசுக்குத் துணை போகும் தீய சக்திகளாலும், போராட்டத்தை தம் கையிலெடுக்க முயலும் பிரமுகர்களாலும் எமக்கு தடைகள் ஏற்படுத்தப்படுவது வழமை.
  • உதாரணத்துக்கு 25.02.2019 இல் “எமக்கு ஓ.எம்.பி வேண்டாம்” என்ற முடிவை சர்வ தேசத்துக்கும், ஐ.நா விற்கும் அழுத்தி ஆணித்தரமாகச் சொல்வதற்காக பாரிய பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • இதே போன்று 30.08.2020 சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று பாரிய பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • எமது போராட்டம் வெற்றிகரதாக நிறைவேறியது.
எழுத்து அளவு:

இப்படியான போராட்டங்களின் போது அரசுக்குத் துணை போகும் தீய சக்திகளாலும், போராட்டத்தை தம் கையிலெடுக்க முயலும் பிரமுகர்களாலும் எமக்கு தடைகள் ஏற்படுத்தப்படுவது வழமை. அத்தடைகளெல்லாம் எமக்கு ஆதரவு தர திரண்டிருக்கும் பொதுமக்களின் பங்களிப்புடன் அவற்றை முறியடித்திருக்கின்றோம்.

உதாரணத்துக்கு 25.02.2019 இல் “எமக்கு ஓ.எம்.பி வேண்டாம்” என்ற முடிவை சர்வ தேசத்துக்கும், ஐ.நா விற்கும் அழுத்தி ஆணித்தரமாகச் சொல்வதற்காக பாரிய பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பேரணி செல்லும் வழியில் சில அடிவருடிகளால் எமது கோசத்துக்கு எதிர்க்கருத்தில் கோசமிடப்பட்டதோடு ஒலிவாங்கி வயர்கள் பிடுங்கி எறியப்பட்டு ஊடகவியலாளர் ஒருவரும் தாக்கப்பட்டார். ஆனால் ஒரு சில நிமிடங்களில் எமது மக்களின் உதவியுடன் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பேரணி தன் இலக்கை நிறைவு செய்து பெரு வெற்றியடைந்தது.

இதே போன்று 30.08.2020 சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று பாரிய பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மாவட்டத் தலைவிக்கு நீதிமன்றால் இதில் பங்குபற்றுவதற்கான தடையுத்தரவு வழங்கப்பட்டிருந்த நிலையில் அம்பாறை மாவட்டத் தலைவியினால் இப் பேரணி வழி நடத்தப்பட்டது. இந்நிலையில் இப்பேரணியை முன்னேற விடாது பாதை மூடப்பட்டது. இந்நேரத்தில் எமது பேரணிக்கு ஆதரவு தர திரண்டிருந்த பொது மக்களாலும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மற்றும் வேறு சில பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பிரமுகர்கள் என அனைத்துத் தரப்பினராலும் மூடப்பட்ட பாதை உடைத்து எமக்கு வழி அமைத்துத் தரப்பட்டது. எமது போராட்டம் வெற்றிகரதாக நிறைவேறியது.

இங்கு கௌரவ சாணக்கியனதும் மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களதும் செயற்பாடானது அவர்கள் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமை. மக்களின் வாக்குகளால் தான் அவர்கள் பாராளுமன்ற கதிரையில் அமரும் பெரும் பேறையும் பல வரப்பிரசாதங்களையும் பெற்றார்கள். ஆனால் இவற்றை தொடர்ந்து அனுபவிக்கும் பேராசையில் வலி சுமந்த எங்கள் போராட்டத்தை வலியே என்னவென்று தெரியாத இவர்களைப் போன்றவர்கள் கையில் எடுப்பதையோ, உரிமை பாராட்டுவதையே எம்மால் அனுமதிக்க முடியாது. தமது சுகபோகங்களை தக்க வைப்பதற்காக எங்கள் கண்ணீரில் எவரும் அரசியல் செய்ய வேண்டாம். நாம் ஆரம்பத்திலிருந்தே அரசியலுக்கு அப்பாற்பட்டு நீதிக்கான இந்த போராட்டத்தை நீதியுடன் முன்னெடுத்து வருகின்றோம். எந்த பாராளுமன்ற உறுப்பினரோ, அல்லது

அரசியல் கட்சியோ அல்லது தனி நபரோ அல்லது எமது சங்கம் தவிர்ந்த வேறு அமைப்புக்களோ எமது போராட்டத்துக்கு உரிமை கோர முடியாது. கோரவும் கூடாது என்று கண்டிப்புடன் தெரிவிக்கின்றோம்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் புலம்பெயர் தேசத்தில் குறிப்பிட்ட எமது போராட்டத்தை தான் நடாத்தியதாக தெரிவித்த கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை எங்கள் உறவுகளுக்கு உறுதிபடத் தெரிவிப்பதோடு அவரின் இக் கூற்றை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

எம் உறவுகளுக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் உங்கள் ஆதரவை கோரி நிற்கின்றோம்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...